கருவிலிருந்து (விந்திலிருந்து) சாம்பல் வரை…
வந்தது வெறுமையாக… செல்வதும் வெறுமையாக என்பதை நினைவுத்தும் வரிகள்!
ஒரு மனிதனின் முழு வாழ்க்கைப் பயணத்தையும் ஏழு நிமிடங்களில் நம் கண்முன் நிறுத்தும் பாடல் இது.
கருவறையில் உருவாகும் உயிர்…
தவழ்ந்து, மழலை பேசி, வளரும் குழந்தைப் பருவம் எய்தி…
ஆசைகளும் மோகங்களும் நிறைந்த இளமையும் எய்தி…
பின், நரைத்த முதுமை எய்தி…
இறுதியில் ஒரு பிடி சாம்பலோடு முடியும் வாழ்வை
பாடுகிறார் பட்டினத்தார்.
பட்டினத்தார், பெரும் செல்வந்த வணிகராக வாழ்ந்தவர். உலகச் செல்வம் அனைத்தும் இருந்தும், ஒரு தருணத்தில் அதன் நிலையாமையை உணர்ந்து; செல்வம், சொத்து, உடல் என அனைத்தையும் துறந்து, ஞானியாக வாழ்ந்தார்.
வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, மோகத்தையும் பயத்தையும் கடந்து, வாழ அழைக்கும் பட்டினத்தாரின் ஆழமான தத்துவப் பயணம் இது.
பட்டினத்தார் வரிகளுக்கு எனது சிறு முயற்சி.
Full Video: https://youtu.be/JDdZjZk8OGI
Lyrics: Saint Pattinathar
Choreography: Kavitha Laxmi
Composer: @GhibranVaibodha
Singer: @golddevaraj333









