தமிழ்க் கலைஞனாய் இருப்பது பெருந்துயரம்
(இந்தப் பதிவு, நூலைப் படித்து முடித்ததும் எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவே அன்றி, கண்ணாவின் ஓவியங்கள் குறித்த திறனாய்வு அல்ல.) நேற்று விமானம் தரையிறங்குவதற்குள் கண்ணா என்கிற சிவகுமாரனின் “கோடுகளும் கோலங்களும்” என்ற நூலைப் படித்து முடித்துவிட்டேன். ஒரே மூச்சில் ஒரு நூலைப் படித்து முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தமது உணர்வுகளை மிக எளிமையான நடையில், எந்தத் தடையுமின்றி இயல்பாக எழுதுபவர்கள் இன்று அரிதாகிவிட்டார்கள் அல்லவா? நூலாசிரியர் கண்ணாவை நாங்கள் “வெற்றிமணி” என்றே அழைத்துப் பழகிவிட்டோம்.…



