
– நான் பயந்து போய் இருக்கிறேன்
துப்பாக்கி வைத்துக் கொள்ள ஆசைப்படும் குழந்தை, கரடி பொம்மை வைத்துக் கொள்ளும் வளர்ந்த குழந்தை, பிச்சை எடுக்கும் குட்டி ராஜா என்று புத்தகம் முழுக்க சிறிதும் பெரிதுமாய் குழந்தைகள். பாலியல் கொடுமை குறித்த சில பதிவுகள் முதுகுத்தண்டை சில்லிட வைக்கின்றன. புத்தகம் முழுவதும் இழையோடும் மனித நேயமும் இறுதியில் தமிழ்க் குழந்தையையும் சிங்களக் குழந்தையையும் ஒரே வீட்டில் சகோதரர்களாய் வளர்க்கும் நார்வே தாயும் இந்த புத்தகத்தைக் கீழே வைத்த பிறகும் நம்முடன் தங்கி விடக் கூடிய விஷயங்கள்.









