நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!
ஒரு கவிதையின் உயிர் « நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே » பாரதியார் எழுதிய பாடல்கள் கணிசமான தொகையுடையவையாக இருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களில் கையாளப்பட்ட பாரதி பாடல்களே பெரும்பான்மை மக்களால் அறியப்பட்டவையாக இருக்கின்றன. அத்தோடு கர்நாடக இசை-ஆளுமைகள், பாடகர்களினால் வெளியிடப்பட்ட இசை அல்பங்களிலும் கணிசமான பாரதி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் திரையுலகும், இன்னபிற படைப்புலகும் பாரதியின் பாடல்களிலிருந்து சூழ்நிலைகளுக்குரிய, பேசுபொருள் சார்ந்த வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து தத்தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. முழுமையான ஒரு படைப்பினை நறுக்கிப்…














