மனிதம் – மானுடம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு

மனிதம் மற்றும் மானுடம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு மனிதம் மற்றும் மானுடம் இரண்டும் ஒத்த கருத்துப் போல தோன்றினாலும், இரண்டும் நுணக்கமான, ஆழமான வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட சொற்கள். இச்சொற்களின் மூலம் வடமொழி. மனு, மனுஸ்ய என்ற வடமொழியில் இருந்தே நாம் தமிழில் அதற்கான அர்த்தங்களை கற்பித்துக்கொண்டிருக்கிறோம். இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருவது போல் தோன்றினாலும், ஆழமாக நோக்கும் போது இவற்றின் பயன்பாட்டிலும், தத்துவத்திலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. மானுடம்: மனித இனத்தை, குழுமத்தை அடையாளப்படுத்தும்…

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

ஒரு கவிதையின் உயிர்  « நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே »       பாரதியார் எழுதிய பாடல்கள் கணிசமான தொகையுடையவையாக இருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களில் கையாளப்பட்ட பாரதி பாடல்களே பெரும்பான்மை மக்களால் அறியப்பட்டவையாக இருக்கின்றன. அத்தோடு கர்நாடக இசை-ஆளுமைகள், பாடகர்களினால் வெளியிடப்பட்ட இசை அல்பங்களிலும் கணிசமான பாரதி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் திரையுலகும், இன்னபிற படைப்புலகும் பாரதியின் பாடல்களிலிருந்து சூழ்நிலைகளுக்குரிய, பேசுபொருள் சார்ந்த வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து தத்தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. முழுமையான ஒரு படைப்பினை  நறுக்கிப்…

பட்டினத்தார் வரிகள்!

கருவிலிருந்து (விந்திலிருந்து) சாம்பல் வரை… வந்தது வெறுமையாக… செல்வதும் வெறுமையாக என்பதை நினைவுத்தும் வரிகள்! ஒரு மனிதனின் முழு வாழ்க்கைப் பயணத்தையும் ஏழு நிமிடங்களில் நம் கண்முன் நிறுத்தும் பாடல் இது. கருவறையில் உருவாகும் உயிர்… தவழ்ந்து, மழலை பேசி, வளரும் குழந்தைப் பருவம் எய்தி… ஆசைகளும் மோகங்களும் நிறைந்த இளமையும் எய்தி… பின், நரைத்த முதுமை எய்தி… இறுதியில் ஒரு பிடி சாம்பலோடு முடியும் வாழ்வை பாடுகிறார் பட்டினத்தார். பட்டினத்தார், பெரும் செல்வந்த வணிகராக வாழ்ந்தவர்.…

தமிழ் சினிமா – தமிழ் சமூகம் – தமிழர் கலைகள்

. பெருந்தாக்கத்தையும் மாற்றத்தையும் குறுகிய காலத்தில் ஒரு சினிமா கொண்டு வரும். எந்தச் சமூகத்திற்கும் இது பொருந்தும் எனினும் தமிழ்ச் சமூகத்தில் தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கிறதே, அதை விளங்கிக்கொள்ளவே முடியாது. இன்றைய காலம் வரை, நாங்கள் எதைச் சரியென்றும் எதைப் பிழையென்றும் கருத வேண்டும் என்பதைச் சினிமாதான் தீர்மானிக்கிறது. காதல், வன்முறை, நுகர்வு மயமாக்கல் போன்றவற்றைத் தீர்மானிக்கிறது. பார்வையாளர்களின் சமூக, உலகப் பார்வையை மெதுமெதுவாக வடிவமைக்கின்றன. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை வடிகட்டி எடுத்து வந்து, அவற்றை…

ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது!

ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது! எனக்கு நான்கு சித்தப்பாக்கள். மூவர் இன்று உயிரோடு இல்லை. எனக்குத் தெரிந்து அப்பம்மா அழாத நாட்களே இல்லை. தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுவார். பாடிக்கொண்டு சமைப்பார். அவருடைய கண்ணீர் சமையலறை முழுதும் சிந்திக் கிடக்கும். சமைக்கும் போதெல்லாம் அவருடைய அழுகுரல் மனதை ஏதோ செய்யும். நான் இலங்கையில் அவருடன் தங்கியிருந்த காலத்தில் அந்தக் குரலை தினமும் கேட்டிருக்கிறேன். இப்போது கூட எங்காவது கந்த சஷ்டி…

நீளிரா

முன்பு போல பார்க்கும் எல்லாவற்றிற்கும் எனது கருத்தைப் பதிவிடும் மனநிலை இப்போது என்னிடமில்லை. ஏதோ ஒரு வகையில் ஒரு படைப்பு முக்கியமானதாகப்பட்டால் மட்டுமே எழுத மனம் உந்தும். நீளிரா எனக்கு அந்த வகை. பெரும் போர்க்காலத்தைக் கடந்த ஒரு சமூகம், காலத்திற்கேற்பத் தன்னை மீளமைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் தளங்களில் திரைப்படத்துறையும் ஒன்று. இத்தனை காலமாக இலங்கைத் தமிழர்களிடம் இருந்து வந்த திரைப்படைப்புகளை அவதானித்தவரை, மனதில் இனம்புரியாத அச்சவுணர்வொன்று இருக்கத்தான் செய்தது. அந்த இறுக்கத்தைச் சற்றே தளர்த்தியிக்கிறது நீளிரா.…

நூலைப்படி!

நூலைப்படி! நூலைப்படி — சங்கத்தமிழ்நூலைப்படி — முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படிநூலைப்படி பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ்…

ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது. அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி…

இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…