நான் பெய்யெனப் பெய்யும் மழை!

வள்ளுவா!

உன்னுடன் கொண்ட
முரண்பாடொன்று
முறிந்து விட்டது
உண்மைதான்

ஓம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழை!

வெள்ளம் பெருகும்
உடைந்தோடும் வரப்புகள்
வழிந்து தணியும் வையம்

பரந்த உலகழித்த
தோழர்களே…
நீர் சமைத்த
பெண்ணொடுக்கி ஒற்றையடிப்பாதையுடைத்து
வழி நெடுக பிராய்ந்தழித்து
கரை மருவிக்
கலகம் செய்யும் நதியாக
எனது மழை நுழைகிறது

கலைந்த கூந்தலோடு
உம்மையும்
பெண் கற்பைப்பாடும்
உம்மொத்த புலவர்களையும்
பிடுங்கியெறிய
என் மழை எழுகிறது

புரண்டோடும் இப்பெருவெள்ளம்
ஒர்நாள் அடங்கும்
மானுடம் குதித்து விளையாடும்
குளமாகும்
அது வரை…

நான் பெய்யெனப் பெய்யும்
மழையாய்
கட்டுக்கடங்காததென் கவிதை.
நான் பாயெனப் பாயும்

பின்னூட்டமொன்றை இடுக