இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”

எல்லா சுவர்களையும் இடித்து நொருக்கி எல்லைகளற்றப் பெருவெளியில் எவ்விதச் சிந்தனைச்சிக்கலுமற்று விடுதலைப் பெண்ணாய் வீசியெறிந்துள்ள இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”.ஆடல்… பெண்ணான கவிதாவின் மொழி ஆளுமை… சிந்தனைச் செழுமை தாய்மண்வலி… வாழ்விட வாங்கல்… உலக அரசியல்… அனைத்தும் கலந்த சிறப்பு… இவரது கவிதையாடலுக்கான களம் புதிது என்பதை உறுதி செய்கிறது. இவரது கவிதை வெற்றி… தனித்துவம் சூடிச் சிறக்கும்
-யுகபாரதி

 

கல்லாதது கவிதை. கவிதைக்கான இலட்சணங்கள் என்ன என்று இன்னமும் எனக்குத் தெரியாது. யாரிடமும் கவிதை எழுதக் கற்றுக்கொள்ளவில்லை. நேரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை பிடித்துவிடும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும்; எனக்கு கவிதை எழுதுவதும், படிப்பதும்; குளிரில் அலைந்த பின் சூடான தேனீர் குவளையடன் போர்வைக்குள் இளைப்பாறல் போன்றது.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்து. ஆண் பெண் தொடர்பான காதல் மட்டுமல்ல உலகில் நாம் காதலிக்கும் அனைத்துப் புறப் பொருட்களும் கவிதையின் காரணியாகின்றன. உணர்வுகளின் வசம் முற்றிலுமாக தன்னை ஒப்படைப்பதுதான் கவிதை என்று சொல்லலாம்.

நான் புதிதாக எதையும் எழுதிவிடவில்லை. பழைய மரம் புதிய பூக்களைப் பூப்பதுபோலதான் இந்தக்கவிதைகளும். எனது கவிதைகளில் நான் என்பது நான் அல்ல, இது தன்னுனர்ச்சியில் ஆரம்பித்து பொது உணர்வுக்குள் பரிமாணிக்கிறது. சொந்த உணர்வுகளை மட்டுமல்ல எம் சக மனிதர்களின் உணர்வுகளையும் என் கவிதையிடம் ஒப்படைத்திருக்கிறேன். புரிகின்ற கவிதைகளைவிட புரியாத கவிதைகளே சிறந்தன என்ற கருத்துக்களே நிலவுகின்றன. ஆனால் அனைவரும் புரிந்துகொள்ளுமளவு எளிமையாகத்தான் எனது கவிதைகள் கிறுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கவிதைகள் வெளிப்படையாகவே பேசுகின்றன.

இனி கவிதைகள் உங்களோடு பேசட்டும்…

அன்புடன்
கவிதா

 

என் ஏதேன் தோட்டம்’ நூலுக்கான விருது

இந்தியாவில் திருப்பூர் தமிழ் மன்றத்தால் 18வது அகவையை ஒட்டி நடாத்தப்பட்ட இலக்கிய விழாவில் 2009ம் ஆண்டின்  ‘சிறப்பு’ இலக்கிய விருதை ‘என் ஏதேன் தோட்டம்’ கவிதை நூல் பெற்றிருக்கிறது.
கட்டுரை, நாவல், சிறகதை, வரலாறு, சிறுவர் இலக்கியம், மருத்துவம் நாடகம், கவிதை ஆகிய துறைகளில் 11 படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வை நடாத்த திருப்பூர் கிருஷ்ணனும், கவிஞர் ஜெயபாஸ்கரனும் நடுவர்களாகக் பங்கேற்றுள்ளனர். 31.01.10 அன்று படைப்பாளிகளுக்கான விருதுவிழா தமிழகத்தில் நடைபெற்றது.
http://www.youtube.com/watch?v=O_NXUljuuU8
பதிப்பகம்: நேர்நிரை பதிப்பகம்
நூல்: கவிதா இரவிக்குமார்
வெளியீடு: 2009

பின்னூட்டமொன்றை இடுக