செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை
2011 ஆம் ஆண்டு நோர்வேயில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் செங்கடல் திரையிடப்பட்டபோது என்னால் சமூகமளிக்க முடியவில்லை. நேற்று மீண்டும் ஒஸ்லோவில் திரையிடப்பட்ட முழுநீள திரைப்படத்தைப் பார்த்துவிடுவதென்ற எண்ணத்தோடு சென்றிருந்தேன். படத்தின் இயக்குனர், நடிகை லீனா மணிமேகலை மற்றும் நடிகர் வசன கர்த்தா ஷோபாசக்தியும் சமூகமளித்திருந்ததால் அவர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அறியும் ஆவல் என்னிடமிருந்தது. இந்திய, இலங்கை அரசுகளை கையில் எடுத்திருப்பதால் தணிக்கைக் குழுவினால் தடை செய்யப்பட்டு கூடுதல் கவனம் பெற்ற படம் என்பதாலும் செங்கடலைப் பார்ப்பதில் கூடுதல்…









