கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு – ரூபன் சிவராஜா
கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு; – சில அறிமுகக் குறிப்புகள் (‘கருவறைக்கு வெளியே’, ‘கறுத்த பெண்’) ‘கருவறைக்கு வெளியே’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதைத் தொகுதி, ‘கறுத்த பெண்’ என்ற தலைப்பிலமைந்த கவிதைத் தொகுதி ஆகிய இரு நூல்களின் வெளியீடும் அறிமுகமும் மே மாதம் 10ஆம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இவை நோர்வேயில்வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த கவிதாவின் நூல்கள். ஆளுமை மிக்க ஒரு நடன ஆசிரியராகவும் கவிஞராகவும் அறியப்பட்டவர் கவிதா. பாடல்களையும் எழுதக்கூடியவர். ஏற்கனவே…








