இந்தியக் கலை மரபு:
அங்கங்கள் | அழகிய ல் | கருத்தியல் உயிர்மிகும் ஓவியங்கள் அரங்காற்றுகை
பாகம் 1
இந்திய ஓவியக்கலை வரலாற்றில் இரவிவர்மாவினுடைய ஓவியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இரவிவர்மாவின் ஓவியங்களினூடு இந்தியக்கலையின் அழகியல் அங்கங்களைப் பேசுவதே «உயிர்மிகும் ஓவியங்கள்» என்ற தலைப்பிலானா அரங்காற்றுகையாகும்.
இந்தியக் கலை மரபுகளை ஆய்ந்தறிந்த அறிஞர்களின் பார்வைகளின் படி, இந்தியக் கலை மரபுகளுக்கென்று தனித்துவமான பல கோட்பாடுகள் (அங்கங்கள்) இருக்கின்றன. பிறநாட்டுக்குரிய கலை மரபுகளிலிருந்து இந்தியக் கலை மரபுகள் வேறுபட்டுத் திகழ்வதற்குக் காரணம் அதன் கலைக் கோட்பாடுகளும் அழகியல் கூறுகளும் ஆகும்.
நடனநாடக வடிவில் அமைந்த எம்முடைய இவ்வரங்கத்திற்கு நாம் ஓவியம், இலக்கியம், நாட்டியம், இசை என்ற நுண்கலைகளை இணைத்து வெளிப்படுத்தியிருந்தோம்.
அழகியற் கோட்பாடு (அங்கம்) என்பது ஆடல், இசை, சிற்பம், ஓவியம் என அனைத்துக் கலைகளுக்கும் பொதுவானவை. இவ் அழகியற்கோட்பாட்டினை ஏழு பிரிவுகளாக அரங்கில் காட்சிப்புடுத்தினோம்.
இந்தியக் கலைமரபில் இருந்து நாம் அரங்கிற்கு எடுத்து வந்த கோட்பாட்டுக் கூறுகளாவன.
- ஆன்மீகம் – மெய்யியற்தேடல்
- குறியீட்டுவாதம்
- இலட்சியப்படுத்துதல்
- கதை சொல்லல்
- கூறியது கூறல்
- சிருங்காரம் – காதலின்பம்
- காமக்கிளர்ச்சி
மேற்சொன்ன அழகியற்கோட்பாடுகளை அரங்கில் கொண்டுவருதல் என்பது சவாலானது. தமிழ் இலக்கியங்களில் இருந்து பொருந்தத்தக்க செய்யுட்கள் கருத்தைப் பலப்படுத்த உதவின.
காரைக்கால் அம்மையார், நளவெண்பா, பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் என அரங்கம் நல்லிலக்கியங்களையும் நாட்டியத்தோடு இணைத்துக்கொண்டது.
முதற்காட்சி:
ஓவியர் இரவிர்மர் அறிமுகம்
இரண்டாவது காட்சி
இலட்சியப்படுத்தல் மற்றும் கூறியது கூறல் என்ற இரண்டு அங்கங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஐந்து நடன ஆற்றுகையாளர்கள் இக்காட்சியிற் தோன்றினர். ஒவ்வொரு நடன மங்கையரும் அரங்கில் இரவிர்மாவின் ஓவியங்களாகினர்.
இலட்சியப்படுத்தல்
இந்தியக்கலையில் முக்கிய அங்கங்களில் ஒன்று ஒரு பொருளை இலட்சியப்படுத்திக் காட்டுதல்.
கடவுள் உருவமோ கதாநாயக பாத்திரமோ காட்டப்படும் போது அப்பாத்திரத்தைச் சாமுத்திரிகா லட்சணத்திற் சொல்லப்பட்ட அனைத்துவிதமான அங்க லட்சணங்களோடும் அமையப்பெற்றதாகக் காட்டுவது. அதுவே இலட்சியப்படுத்திக் காட்டுதலாகும். சமண, பௌத்த, வைணவ, சைவ மரபுகள் அனைத்திற்கு இது பொதுவானதே.
ஒரு கலைஞன் ஒரு சிற்பத்தை செய்வதென்றாலும், ஒர் ஓவியத்தை வரைவதென்றாலும் சில விதிமுறைகளுக்கு (சாமுத்திரிகா லட்சணம்) ஏற்பவே அவைகளைக் படைக்க முடிந்திருக்கிறது. அரசர்களின் உருவச் சிலைகளைச் செய்கின்ற போதும் இம்விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டே படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகைளில் இலட்சியப்படுத்திக் காட்டுதலின் மூலம் கலைஞனுக்கு இருந்த சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது.
சொல்ல விழைவதையும் அதிற் காணும் முக்கியமானவைகளையும் யதார்த்தமாகக் காட்டாமல், அங்கங்களைச் சாமுத்திரிகா இலட்சணங்களோடு காட்டுவதே இலட்சியப்படுத்தலாகும். இது யதார்த்தவாதத்திற்கு எதிர்மறையானது. இதைக் கருத்துநிலைவாதம் என்றும் கூறலாம்.
கூறியது கூறல்
இந்தியக் கலைமரபில் குறிப்பிட்ட கதைகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல நூற்றாண்டு காலமாக மீளமீளச் சொல்லப்பட்டு வருவது ‘கூறியது கூறல்’ எனப்படுகிறது.
- மகாபாரதக் கதைகள்
- இராமாயணக் கதைகள்
- புராணக் கதைகள்
கதைகள் மட்டுமல்ல. இந்தியக் கலை மரபில் அழகியற் தோற்றங்கள் பலவும் கூட மீளமீளக் காண்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
அழகியற் தோற்றங்கள்: சில உதாரணம்
• கிளியோடு பேசும் பெண்
• கண்ணாடி பார்க்கும் பெண்
• ஒய்யாரமாக நிற்கும் பெண்
• காலில் முள் எடுக்கும் பெண்
• பந்து விளையாடும் பெண்
• விசக்கன்னிகள்
உயிர்மிகும் ஓவியங்களின் நடனநாடகக் காட்சி இரண்டு, இலச்சியப்படுத்தலோடு அழகியற் தோற்றங்களையும் இணைத்துக்கொண்டது.
அடுத்த பதிவில் காட்சி மூன்று,
தொடரும்…
.







































Takk ! அருமை ! நன்றியும் வாழ்த்துக்களும்
LikeLike