உயிர்த்தோழி


தேவாலயச் சுவரோரம்
ஒளி உமிழும் மெழுகுகளின்
நீள்வட்ட தீக்குஞ்சுகளின் ஓளிர்வோடு
உன்னிடம் பேசவென
வெறுவெளியில் புகைந்திருக்கின்றன
தோழமைக்காலங்களுக்கான வார்த்தைகள்

 

இப்போதுதான் வேலைமுடிந்து வந்தேன்

மழைப்பதத்தின் ஈரத்தோடு நிகழ்கிறது
கருவறையிலிருந்து விடுபட்ட
குழந்தைகளின் அலட்டல்கள் இங்கு
வெளிப்புற ஜன்னல்க் கண்ணாடியில்
இடைமறிக்கப்பட்டு பூமிபுணர இறங்கிய
மழை ரேகைகள்.
அழகாய் விடிந்துபோகிற இரவு.
சாத்தியங்களுடன் தாவிச்செல்லும்
நாட்களையும் புறம்தள்ளி
தவிப்பு நிறையும் வெளிகளின் நெளிவு

அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார்
மகனின் வீட்டுப்பாடத்தோடு நான் அமர்ந்திருந்தேன்

கடல்மணலை அளையும் தருணம்
தோள் கடந்து போகும் பறவைகளோடு
காணும் நிலாப்பேச்சு இரசனைக்காரிக்கு
மகனின் முதலாமாண்டுப் புத்தகத்தில்
வரைந்திருக்கும் கோட்டுநிலா போல
திருப்தியாய் இல்லை இந்த வாசனை

நான் கைபேசியை வைக்கிறேன்

பின்னூட்டமொன்றை இடுக