”மீண்டும்” திரைப்படம் ஒரு பார்வை – கவிதா
இந்தியத் திரைப்படக்குவியலுக்குள் புதைந்து கிடக்கும் எம் உறவுகள் தமது சொந்த ஈழப் படைப்புகளுக்கு வரவேற்ப்புக் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத் தமிழர்களும் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய NT picture ன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்” 12.09.09 அன்று மாலை ஒஸ்லோவில் இரண்டு தடவைகள் திரையிடப்பட்டது. காதலுடன் கூடிய…









