இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”

எல்லா சுவர்களையும் இடித்து நொருக்கி எல்லைகளற்றப் பெருவெளியில் எவ்விதச் சிந்தனைச்சிக்கலுமற்று விடுதலைப் பெண்ணாய் வீசியெறிந்துள்ள இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”.ஆடல்… பெண்ணான கவிதாவின் மொழி ஆளுமை… சிந்தனைச் செழுமை தாய்மண்வலி… வாழ்விட வாங்கல்… உலக அரசியல்… அனைத்தும் கலந்த சிறப்பு… இவரது கவிதையாடலுக்கான களம் புதிது என்பதை உறுதி செய்கிறது. இவரது கவிதை வெற்றி… தனித்துவம் சூடிச் சிறக்கும் -யுகபாரதி   கல்லாதது கவிதை. கவிதைக்கான இலட்சணங்கள் என்ன என்று இன்னமும் எனக்குத் தெரியாது. யாரிடமும்…

அனுபவங்களை மட்டுமாய் விதைத்துத்தந்த ஒரு தோப்பு அது

கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது. சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது. அரிதாரம் பூசாத அவதாரம் இது! மு.மேத்தா. தொட்டிப்பூ என்னுரை குரும்பசிட்டி என்னும் எனது கிராமத்தை எனக்கே தூரத்தில் ஒரு ஓவியம் போல மங்கலாய்தான் தெரியும். போரும் உறவுகளின் இழப்பும் என்னை மூன்று முடிந்து சில…

ஒரு சருகு, ஒரு துளி மழை சில உடல்மொழி

” தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர். இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.” அணிந்துரை…

கறுப்பு வெள்ளைக் கனவுகள்!

மாலை நேரம். சினேகிதி வீட்டிலிருந்து கிளம்ப மனமற்று கதிரையோடு உறைந்து போயிருந்தேன். மனம் இலகுவாக இருந்தது. எனது மகனும் அவனுடைய சினேகிதனும் விடியோ விளையாட்டில் மூழ்கிப்போயிருந்தார்கள். வெளியே வானம் மிருதுவான மழைத்துமிகளை தூவிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் போனால் வெளியில் சில பூச்செடிகள் வைக்க வேண்டும் என்பது இன்றைய எனது திட்டமாக இpருந்தது. போகும் போதே எந்த நிறத்தில் என்ன செடி வாங்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் போகும் வழியிலுள்ள பூக்கடையில் வாங்கிப் போகலாம். ஆகக் கூடி இங்கு இன்னும்…

எமது சிந்தனைச் சேமிப்புகளின் உலகப்பெரும் வங்கி.

நோர்வேஜிய மொழி: Jan Vincents Johannessen  தமிழ்: கவிதா (நோர்வே)   கலைஞராக கடல்வணிகராக விவசாயியாக அல்லது விஞ்ஞானியாக, நாம் யாராக இருந்தாலும், யாரோ ஒருவரின் பிரதிபலிப்பாகவே நாம் இருக்கின்றோம். யாரினுடைய பிம்பமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்பது மட்டுமே எம்மால் தீர்மாணிக்கப்படுகின்றது. நாம் ஒரு குழுவில் எம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதென்பது எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நாமும்  சரி அக்குழுத் தலைமைகளும் சரி குழுவின் முக்கிய கொள்கைகளை மீறாதிருப்பது கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடுகிறது. நாம் இணைந்துகொண்ட குழுவின்…

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?

மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும்,…

விமர்சனம், விமர்சகன்.

ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான சூழலில்தான் எழமுடியும். ஒரு கலைஞனோ ஒரு அமைப்போ தனது படைப்பின் அல்லது தனது குழுவின் மீது தெளிவான நம்பிக்கை கொண்டுள்ள இடத்திற்தான் அதற்கமைய ஆரோக்கியமான விமர்சகங்களுக்கான சூழல் அமைகின்றது. தனது படைப்பில் தெளிவான கருத்துடைய ஒரு படைப்பாளியால் தன் தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ அல்லது செவிமடுத்துகொள்வதிலோ தான் தாழவில்லை இதனால் முடிந்தவரை நான் உயர்வதற்கான வழிகளையே உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்ற மனநிலையில் இருந்து ஒரு விமர்சனத்தைப் பார்க்க முடியும். ஒரு விமர்சனத்தை…

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு

  “சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.” கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான்…

செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை

2011 ஆம் ஆண்டு நோர்வேயில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் செங்கடல் திரையிடப்பட்டபோது என்னால் சமூகமளிக்க முடியவில்லை. நேற்று மீண்டும் ஒஸ்லோவில் திரையிடப்பட்ட முழுநீள திரைப்படத்தைப் பார்த்துவிடுவதென்ற எண்ணத்தோடு சென்றிருந்தேன். படத்தின் இயக்குனர், நடிகை லீனா மணிமேகலை மற்றும் நடிகர் வசன கர்த்தா ஷோபாசக்தியும் சமூகமளித்திருந்ததால் அவர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அறியும் ஆவல் என்னிடமிருந்தது. இந்திய, இலங்கை அரசுகளை கையில் எடுத்திருப்பதால் தணிக்கைக் குழுவினால் தடை செய்யப்பட்டு கூடுதல் கவனம் பெற்ற படம் என்பதாலும் செங்கடலைப் பார்ப்பதில் கூடுதல்…

உறவு

தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் வளர்ந்துவரும் திரைக்கலை பெரும் சவால்களுக்கு மத்தியில் தன்னை இழுத்துக் கொண்டுபோகவேண்டிய நிலையில் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். தென்னிந்திய சினிமாக்களின் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் மீறி ஈழத்துச்சினிமா தனது அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது…