பாரதி – கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம் – பகிர்வு 1

நான் எழுதுவதை விட எழுத நினைப்பது அதிகம். எத்தனை கவிதைகள் எழுதி முடித்தாலும் சில கவிதைகளைப் படிக்கும் போது இந்தக் கவிதைகளை நான் எழுதவில்லையே என்ற ஆதங்கம் ஆழ்மனதில் ஊர்ந்து போகும். மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதையில் வடிந்து ஹைக்கூக்கள் வரை கவிதைகளில் பல விதங்கள் இருந்தாலும் இந்த அவரசர வாழ்க்கையில் நான் விரும்பி ஒரு சில நொடியாவது நின்று வாசித்துப் போவது அதிகம் புதுக்கவிதைகள் தான். அப்படி நின்று படித்து சுவைத்த கவிதைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த…

தினத்தந்தியில் வெளியான செவ்வி – 18.11.2012

இன்று 18.11.2012 தினத்தந்தியில் வெளியான செவ்வி எடுக்கப்பட்ட விடயத்தில் ஒரு சில விடயங்களே அங்கு போடப்பட்டதால் இங்கே முழு பேட்டியையும் தந்திருக்கின்றேன். தங்களைப் பற்றி இலங்கையில் குரும்பசிட்டி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட நான், போரில்தந்தையை இழந்த நிலையில் எனது தாயாருடன் தமிழ்நாட்டிற்கு நான்கு வயதில்; புலம்பெயர்ந்தேன். அதன் பின் பன்னிரண்டு வயதிலிருந்து நோர்வே மண்ணில் எனது தாயாருடன் வாழ்ந்துவருகிறேன். எனது கலை இலக்கிய ஆர்வத்திற்கு  எனது தாயாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.தகவல்தொழில்நுட்பம் படித்து, தற்போது Miele  எனும்…

சகித்துக்கொண்டுதான் சாகசங்கள் புரிகிறோம் வெட்கமில்லாமல்

நூல் அறிமுகம்: கவிதாவின் ‘என் ஏதேன் தோட்டம்’ எல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள்…

கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal//

எனது திரைப்பாடல் தொடர்பான  பானுபாரதியின் விமர்சனம்… கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal// பெண்ணியக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த கவிதா, தமிழக சினிமா சகதிக்குள் எப்படி, எப்படி விழுந்தாரோ…? ஆணாதிக்கத்தை ஆவேசமாகச் சாடிய கவிதா எப்படி எப்படி இப்படி…? “உன் விரல்களில் வில்லாய் உடல் வளைகிறதே, கழுத்துவரை புது உலகம் ஒன்று நகர்கிறதே… கணைகளுமே என் விழியில் வந்து பாய்கிறதே…” ஆணின் போகப்பொருளாய் பெண்ணுணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடிகிறது.// முகநூலில் பதிவிடப்பட்ட கவிதாவின் இந்தப் பாடலுக்கு இப்படியொரு குறிப்பை…

மே 22. 2010உம் கவிதாவின் கவிதைகளும் -சஞ்சயன்

மே 22. 2010 நேரம் 23:50 இடம்: ஒஸ்லோ அவசர நோயாளர் வைத்தியசாலை (Olso legevakt) இன்றைய நாள் நல்லாகத் தான் விடிந்தது மலர்ந்தது. மாலை வரை பிரச்சனையேஇல்லாமல் சிவனே என்று போய்க் கொண்டிருந்தது. அதிசயமாய் கொம்பியூட்டர் திருத்தச் சொல்லி எனது கம்பனிக்கு ஆடர்வரமலிருந்தது இன்று. முன் மதியம் நட்பு ஒன்றுடன் குறொன்லான்ட் என்றும் புறநகர்ப் பகுதிக்கு போய்வந்தேன். மதியம் ப்ளாக் இல் எழுதினேன். மாலை காவிதாயினி கவிதாவிடம் இருந்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் (காசுகொடுக்காமல்) கொண்டு…

என் ஏதேன் தோட்டம் பற்றிய விமர்சனம் – கலைஞன்

  விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன. ஆண் ஆணாக இருக்கட்டும், பெண் பெண்ணாக இருக்கட்டும்.. பிரச்சனை இல்லை. ஆனால், பெண்ணாக தன்னை இனம்காட்டி கவிதை படைத்துள்ள கவிஞர் அவர்கள் ஆணாக இருக்கக்கூடியவர்களை தனக்கு ஒப்பான இடத்தில் வைத்து தரிசிக் கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் எவ்வாறு எவ்விதத்திலும் ஆண்களிற்கு சளைத்தவர்கள் இல்லையோ அதுபோலவே ஆண்களும் பெண்களிற்கு நிகரானவர்கள்தானே? பெண்கள்…

பெண்ணியத்தின் தளை முறிக்கும் முன்னெடுப்பு – -சிங்கப்பூர் ராமசாமி

  சென்ற வாரம் சென்னை கோகுலம் பார்க் ஹோட்டலில் நண்பர் குகனின் அழைப்பின் பேரில் நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன்.  இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ, கவிஞர் மு.மேத்தா, இயக்குனர் பாலுமகேந்திரா, தீனா, கவிஞர் யுகபாரதி மற்றும் சிலர் வாழ்த்துரைக்கவும், விமர்சனம் செய்யவும் வருகை தந்திருந்தனர். நூல் விமர்சனத்துக்கும், நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்… நிச்சயம் இல்லை. அந்த விழாவில் பேசியவர்களின் பேச்சுக்கும்  கவிதாவின் கவிதை நூலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும்.…

இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”

எல்லா சுவர்களையும் இடித்து நொருக்கி எல்லைகளற்றப் பெருவெளியில் எவ்விதச் சிந்தனைச்சிக்கலுமற்று விடுதலைப் பெண்ணாய் வீசியெறிந்துள்ள இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”.ஆடல்… பெண்ணான கவிதாவின் மொழி ஆளுமை… சிந்தனைச் செழுமை தாய்மண்வலி… வாழ்விட வாங்கல்… உலக அரசியல்… அனைத்தும் கலந்த சிறப்பு… இவரது கவிதையாடலுக்கான களம் புதிது என்பதை உறுதி செய்கிறது. இவரது கவிதை வெற்றி… தனித்துவம் சூடிச் சிறக்கும் -யுகபாரதி   கல்லாதது கவிதை. கவிதைக்கான இலட்சணங்கள் என்ன என்று இன்னமும் எனக்குத் தெரியாது. யாரிடமும்…

அனுபவங்களை மட்டுமாய் விதைத்துத்தந்த ஒரு தோப்பு அது

கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது. சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது. அரிதாரம் பூசாத அவதாரம் இது! மு.மேத்தா. தொட்டிப்பூ என்னுரை குரும்பசிட்டி என்னும் எனது கிராமத்தை எனக்கே தூரத்தில் ஒரு ஓவியம் போல மங்கலாய்தான் தெரியும். போரும் உறவுகளின் இழப்பும் என்னை மூன்று முடிந்து சில…

ஒரு சருகு, ஒரு துளி மழை சில உடல்மொழி

” தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர். இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.” அணிந்துரை…