அனுபவங்களை மட்டுமாய் விதைத்துத்தந்த ஒரு தோப்பு அது
கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது. சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது. அரிதாரம் பூசாத அவதாரம் இது! மு.மேத்தா. தொட்டிப்பூ என்னுரை குரும்பசிட்டி என்னும் எனது கிராமத்தை எனக்கே தூரத்தில் ஒரு ஓவியம் போல மங்கலாய்தான் தெரியும். போரும் உறவுகளின் இழப்பும் என்னை மூன்று முடிந்து சில…









