நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் -Bokhandelens hus

Bokhandelens hus

நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் (bokhandelens hus) 1851 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்று. நோர்வே நாட்டில் வெளியிடப்படும் நூல்களை மேம்படுத்துவதும், ஆவணப்படுத்திப் பாதுகாப்பதும், நோர்வேஜிய மொழியின் இலக்கியத் தரத்தை, சமூகத்தில் புத்தகங்களுக்கான இடத்தை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கின்றது.

எழுத்தாளர்களும் அவர்கள் தொடர்பான ஆவணங்களும் காணக்கிடைக்கின்றன. முக்கியமான அனைத்து பதிப்பகங்களும், புத்தகக்கடைகளும் இந்நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கின்றனர்.புத்தகங்கள் தொடர்பான, கடைகள், வெளியீட்டாளர்கள், புத்தகம் தொடர்பான வர்த்தக கல்வியில் நாட்டமுள்ளோர், அனைவருக்குமான தொழில்முறைக்கல்வியும் இங்கே ஒரு செய்ற்திட்டமாக வழங்கப்படுகிறது.

ஒரு இலக்கியப்படைப்பினைக் கொண்டு வர முயற்சிக்கும் நூலாசிரியருக்குத் தேவையான அனைத்து உதவிகளும், வழிகாட்டல்களும் பதிப்பகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. எழுத்துப்பிரதியை படித்து, தகுதியுடைய நூலாசிரியர்களோடு தொடர்பு கொள்வது.எழுத்துப் பிரதியை அனுப்பி, அதை தேர்தெடுக்கப்பட்ட வாசகர்கள், – விமர்சகர்களுடாக கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வது. பெறப்பட்ட கருத்துக்களையும் கவனத்திற் கொண்டு மேலும் அப்பிரதி மேம்பட நூலாசிரியரை வழிநடத்துவது.மொழிவளத்தை மேலும் மெருகூட்டுவதற்கான திருத்தங்களை நூலாசிரியருடன் இருந்து பணியாற்றுவது.பிரசுரிக்கப்படும் நூல்களை உரிய இடத்தில், உரிய மட்டத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது.

நோர்வேஜிய நூல்களும் அதன் கணக்கெடுப்படுகளும் என நிறுவனத்தின் செயற்பாடுகள் பல.ஐம்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நோர்வேயில் ஒரு பதிப்பு வெளிவந்தபின்னர் தோராயமாக 16000 பிரதிகள் விற்கப்படுகின்றன. எமது தமிழ் நூல்கள் விற்க்கபடும் தொகை பொதுவாக 1000 பிரதிகள் எனச் சொல்லப்படுகிறது

பின்னூட்டமொன்றை இடுக