தென்னக ஓவியக்கலைகளின் முன்னோடியாக இருப்பது சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டின் இடைக்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை ஓவியங்கள் இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது.
இந்தியாவில் இரண்டு இடங்களில் தொன்மை வாய்ந்த ஓவியக்கலைகளைக் காணலாம். அதில் ஒன்று அஜந்தா மற்றொன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமைந்த சித்தன்ன வாசல்.
’சித்தன் கிரி வாசல்’ என்ற பெயரிலும், ’சிறிய அன்னல் வாழிடம்’ என்ற பெயரிலும் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டு சித்தன்ன வாசலில் பணியாற்றிய பாதுகாவலர் கூற்றுப்படி இவ் ஓவியங்கள் ”ஸ்ரீ அவனி பாக சேகர வள்ளப பாண்டியன்” காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.
குகையைக் குடைந்தெடுக்க நூற்றாண்டு காலம் எடுக்கப்பட்டதாகவும் அதன் பின் ஆட்சிபுரிந்த மன்னர்கள் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாறைகளுக்கு மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு, சுண்ணாம்பு காய்ந்து போவதற்குள் இயற்கைச் சாயங்களால் தீட்டப்பட்ட சுதை ஓவியங்களாக இவை உள்ளன. முதலில் களிமண்ணும், அதன் மேல் சுண்ணாம்பும், அதற்கு மேலாக பல அடுக்குகளால் பூசப்பட்ட சாயங்களும் கொண்டு வரையப்பட்டிருக்கின்றன.
அன்னப்பறவைகள், தாமரை மலர்கள், மகர மீன்கள், சமண துறவிகள், யானை, அன்றில் பறவைகள், இரு தூண்களிலும் நடன மங்கையர், மன்னர் என்பவை அங்கு காணப்படுகின்றன.

அங்கே ஒரு தியான மண்டபமும் குடையப்பட்டிருக்கிறது. தியான மண்டபத்திற்குள் ஐம்புலன்களையும் அடக்கி சிந்தனையை ஒருநிலைப்படுத்தி தியான நிலை அடையும் போது அதிர்வலையில் ஒருந்து ஒலி எழுகிறது. பாதுகாவல் அவ் அதிர்வலைகளை எழுப்பியதை காணவும், கேட்கவும் கூடியதாக இருந்தது.
03.09.2019










பிங்குபாக்: சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் — – endlesslove