
சந்திரகிரிக் கோட்டை கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் நாராயணவனத்தைத் தலைநகராகக் கொண்டு சந்திரகிரி மண்டலப் பகுதியை மண்டலாதிபதியாக இருந்து ஆண்டு வந்த இம்மடி நரசிம்ம யாதவ ராயர் என்ற குறுநிலத் தலைவனால் கட்டப்பட்டது. திருப்பதி – ஊத்துக்கோட்டை – சென்னை வழியில் இந்த நாராயணவனம் உள்ளது
சந்திரகிரி ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அழகான கிராமம். ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலத்தில் அமைந்துள்ள சந்திரகிரி கி.பி 1367 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டு வரை விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கியது
அதன் பின்னர் சந்திரகிரி கோட்டை மைசூர் ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டு, பின்னர் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் வசம் சென்றது. இப்போது இந்தக் கோட்டையை தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
(எழுதும் சோம்பேறித்தனத்தால் மேலே எழுதியது எல்லாம் வலைத்தளத்தில் சுட்டது)









