
அத்திரம்பாக்கம் என்ற இடம் பார்ப்பதற்கு ஒரு சாதாரணக் கிராமம் போலதான். இது சென்னை 60 கீலோமீட்டர் தூரத்தில், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையில் இருக்கிறது. இது தொல்பழங்கால மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் (குவார்சைட் கற்கள்) பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான (5 -10 லட்சம் வருடம்) ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர்.
இவ்வினம் வாழ்ந்ததற்குரிய சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. தமிழகத்தில் அல்லது இந்தியாவில் என்று இல்லாது, உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் இவ்விடம் கருதப்படுகின்றது. உலகத்திற்கே இது முக்கியமான இடமாகும். இன்றைய மனித இனமான humo sapiensற்கு முந்தய மனித இனம் humo erectus வாழ்ந்ததற்குரிய சான்று பல கிடைக்கபெற்ற இடங்களில் இதுவும் ஒன்று. கிடைக்கபெற்ற சான்றுகள் பலவும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தை முதலில் 1850களில் கண்டுபிடித்தவர் Robert Bruce Foote. இவர்கள் நிலப்பொதியியலளாளர்கள். இப்படியான கண்டுபிடிப்புச்சான்றுகளை தனது ஆராய்சியில் வைத்தே, குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ற டாரவின் தியரி (Charles Darwin) கொடுக்கப்பட்டது. இது பார்ப்பதற்குச் சாதாரணமாகத்தெரிந்தாலும் மிகமுக்கயமான ஒரு இடமாகும்.
ஒரு கிராமத்தின் வயல் வெளி, முட்காடுகள், புதர்கள், தோப்புகள், சேறுசகதிகள் என அனைத்தும் தாண்டி சென்றால் இந்த இடத்தைக்காணலாம். குடியம் என்ற ஒரு குகையும் சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. 1000, 2000 வருடம் என்று தமிழர் பெருமை பேசும் நாம் இப்படியான ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்கே முக்கியமான இதுபோன்ற இடங்கள் எம்மிடம் இருந்தும் ஏனோ பாதுகாத்து வைக்கமுயலுவதில்லை.









