
வயதான கிழவன்
நோயாளி
அழுகியதொரு பிணம்
ஒரு முனிவன்
ஒரு போதிமரம்
புத்தன் போய் வெகுநாளாகிறது!
வேறுலகம் காணக் கொஞ்சமாய் நகர்ந்தாலும்
அம்மாகூடச் சொல்வாள்
எங்கே போகிறாய்
பேசாமல் இரு பிள்ளையோடென
மரபின் தொடர்ச்சியாக
அதே சாரத்தோடு
இன்றுவரை
தப்பிக்கத் தெரியாதவள்
யசோதரை!









