நீ எங்கிருக்கிறாய்?

lonely

மண் நுழைந்து வேர்களினிடையே ஊறிய
அந்தச் சொட்டுகள் போலவே
என் பூமியின் விரிந்த தேகமெங்கும்
கொட்டித் தீர்த்தனை நீ!

என் வீட்டுப் புதர்களிலும் பூக்களிலும்
படர்ந்து வரும் காற்றோடு
கலந்து நின்றனை நீ!

இப்போது
எங்கிருக்கிறாய் நீ,
என்று நான் கேட்கலாமா?

யாதொன்றும் இல்லாத காலங்களின் அமைதியறுத்து
யுத்தத்திற்குத் தயாராகி
எழுந்து விரிகிறது ஒரு பறவை

நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும்
காற்றின் படர்வுமற்று
எதுவும் தொலைத்த சிலவரிகளைத்
தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி
விரித்த சிறகோடு கண் அயர்ந்துவிடுகிறது…
அதுதான்,
நீயென்ற,
யாதொன்றும் இல்லாத
காலங்களைச் சொன்னேன்,
கௌதமா!

பின்னூட்டமொன்றை இடுக