
கொண்ட நேசங்களுக்கும்
வெறுப்பு உணர்வுகளுக்கும்
அலகு மயிரிழைதான்
பூக்களும்
இலையும்
செடியும்
மரமும்
வெளிகளும்
மலைகளும்
வானும்
அகண்ட சமூத்திரங்களும்
பெரும் பிரபஞ்சமும்
எதனாலும்
நிரப்பப்படுவதற்கில்லை.
பால்மண்டலத்தைபோல விரிந்து கிடக்கிறது
இந்த மயிரிழை விரிசல்
அதன் மாயையின் பொருள் விளங்கா
செய்வதறியாது உறைந்துவிட்டேன் சகி!
இருந்தும்
ஒன்று கண்டு வந்தேன்
அண்டமெங்கும் அதுவே சக்தியென
எதையும் தகர்த்து
எதையும் மறைத்து
எதையும் உடைத்து
சூன்யத்தை நிறைத்து
வாழ்க்கையை நிரப்பிவிடுகிறது
இந்த முகமூடி.
வெறுப்பு உணர்வுகளுக்கும்
அலகு மயிரிழைதான்
பூக்களும்
இலையும்
செடியும்
மரமும்
வெளிகளும்
மலைகளும்
வானும்
அகண்ட சமூத்திரங்களும்
பெரும் பிரபஞ்சமும்
எதனாலும்
நிரப்பப்படுவதற்கில்லை.
பால்மண்டலத்தைபோல விரிந்து கிடக்கிறது
இந்த மயிரிழை விரிசல்
அதன் மாயையின் பொருள் விளங்கா
செய்வதறியாது உறைந்துவிட்டேன் சகி!
இருந்தும்
ஒன்று கண்டு வந்தேன்
அண்டமெங்கும் அதுவே சக்தியென
எதையும் தகர்த்து
எதையும் மறைத்து
எதையும் உடைத்து
சூன்யத்தை நிறைத்து
வாழ்க்கையை நிரப்பிவிடுகிறது
இந்த முகமூடி.









