17 may – ஒரு பொழுது!

எங்கும் சிவப்பு நிறக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன
முகம் மலர்ந்த மனிதர்கள் ஈசல்களைப் போல வந்துகொண்டிருந்தார்கள்
வாழ்த்துக்கள் சொன்னார்கள்இ வாழ்த்துக்கள் சொன்னேன்

இசைமுழங்கினர் கேட்டுக்கொண்டிருந்தேன்
சுதந்திரம் பற்றிப் பேசினர் பார்த்துக்கொண்டிருந்தேன்
சுதந்திரகீதம் முழங்கிற்று நானும் முணுமுணுத்துக்கொண்டேன்
குழந்தைகள் அணிவகுத்துச் சென்றார்கள்இ
அவர்கள் திரும்பும்வரை காத்துக்கொண்டிருந்தேன்

அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள்
பலர் தமைநோக்கி அலைபேசிப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.
சிறுமியர் மலர்கிரீடம் சூட்டியிருந்தனர். அழகாயிருந்தது
பாண்டங்கள் கொடுத்தார்கள்இ கட்டியணைத்தார்கள்
நிதிசேகரித்தார்கள்இ நின்று பேசினார்கள்
தெருவெங்கும் பூக்கள் சுதந்திரமாய்ச் சிரித்தாடின.

கைகட்டி அசைவற்று நாகரிகச் சிரிப்போடு
நான் இன்னும் அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தேன்
பிறகு எந்தச் சலனமுமற்று திரும்பி நடந்தேன்.

நாளை May 18.

பின்னூட்டமொன்றை இடுக