
நீளமான இரவில்
இருட்டின் அடர்த்தி கிழித்து
எரிந்து கொண்டிருந்தது
உருகிவழிந்த மெழுகுவத்தி
அழகான மழை வெளியே
அற்புதமாயிருக்கிறது மண்வாசம்
நிசப்தத்தின் ஆழுமையில்
வெடித்து சிதறுகிறது
உன்னுடனான
என் முதல் நாள் நினைவுகள்
ஒரு நொடியாய்க் கரைந்துபோன
அந்த ஒருநாளப்பொழுது
எத்தனை இரவை நீளமாக்கும்
சொல்
சிதறிய உன் நினைவுத்துண்டுகள்
பொறுக்கி கீறிப்பார்க்கிறேன்
என் உயிர்முழுதும்
கசிந்துபோகும் ஏக்கத்தின்
உச்சத்தில் யார் என்று
நான் சொல்லியா தெரியவேண்டும்
உனக்கு?









