இறைமீட்பு

நீ கொடுப்பாய் என்று
தெரிந்தபின்னும்
கேட்காமல் நான்
எடுத்துக்கொண்டது
காதல்

ஒரு முறை அடித்தால்
மறு கன்னத்தைக்
காட்டச்சொன்னார் இயேசு
அடிக்கடி நினைவில் வந்து
தொலைக்கிறது அது
நீ கொடுத்த முத்தத்தில்

இன்பப் படுக்கையில்
உன் நினைவுகளின்
இறைமீட்பு.
போர்த்திக் கொள்கிறது
கனவு

உன் விரலால் என் விரல் கவ்வி
நீ கற்று தா
நாம் கலைகள்
பயில்வோம்
நிலவினிலே
மென் இதழ் முத்தமொன்றும்
இதழ் உதிர்க்கும் வார்த்தைகளும்
அள்ளிபோக நான் வருவேன்

யாசகனாய்  இருப்பதில்
ஆட்சேபனை எனக்கில்லை
கர்ணனாக நீ இருந்தாலும்
கொடுப்பதெல்லாம் எனக்கென்றால்

பின்னூட்டமொன்றை இடுக