
என்னைப் பிடித்துபோனதாக
சொல்லி
என் கண்களிலும்
கனவுகளைக் கொய்து போட்ட
காதலனே..
முதலில் யாசிப்பதை
நிறுத்து
என் அடிமையென்று உளருவதை
நிறுத்து
எனக்கு அடிமைகளில்
பிடிப்பில்லை
அடிமைகளை நான்
காதலிப்பதில்லை
நிமிர்ந்து நில்
என் வாழ்க்கைதுணையாகப்
போகிறவனாய்…
எனது வழியெங்கும்
காதல் வினாக்களை
வீசீ எறிகிறாய்
என்னை நோக்கி
உனது கேள்விகளுக்கு
பதில் சொல்ல வேண்டியது
நானல்ல
நீ தான்!
நான் நடந்தால்
பூவாசம் என்று சொன்னாய்
அதானால் கேட்கிறேன்
எனக்கு வியர்திருக்கையில்
நீ பார்திருக்கிறாயா?
என் பருவத்தின்
உடல் சுகமென்றாய்
காலத்தின் மாற்றத்தால்
என் சுருக்கம் இழைந்த
முகத்தை உன் கைகளில்
எந்திக் கொள்ள நீ
தயாரா
முகப்பூச்சம் கண்மையும்
இல்லாத பெண்ணாய்
பார்த்திருக்கிறாயா
என்னை
என் சிரிப்பை
ஒளிந்த நின்று இரசிப்பவனே
என் சினம் பொங்கும்
பொழுதுகளை தரிசித்திருககிறாயா?
மணிகணக்கில் காத்திருக்கிறாய்
என் வீதிகளில்
தேவதை என்கிறாய்
தென்றல் என்கிறாய்
மலர் என்கிறாய்
மது என்கிறாய்
உணர்வுகளின் உச்சத்தில்
நீ உளருவதில்
நானும் உருகிவரலாம்
உன்னோடு
இப்பொழுது நான்
கங்கைதான்
நீ நீந்தலாம் என்னோடு
காலப்போகில்
வற்றிவிடும் நதியாக
சுடு மணலில்
நீ நடக்க வேண்டி வரலாம்..
உன் கால்களில் தொப்பளங்களும்
மனதில் ரணங்களும்
வரலாம்…
நீ தான்
சொல்ல வேண்டும்
பதில்.










மிகவும் அருமை சகோ..
LikeLike