எமது சிந்தனைச் சேமிப்புகளின் உலகப்பெரும் வங்கி.

நோர்வேஜிய மொழி: Jan Vincents Johannessen  தமிழ்: கவிதா (நோர்வே)

 

கலைஞராக கடல்வணிகராக விவசாயியாக அல்லது விஞ்ஞானியாக, நாம் யாராக இருந்தாலும், யாரோ ஒருவரின் பிரதிபலிப்பாகவே நாம் இருக்கின்றோம். யாரினுடைய பிம்பமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்பது மட்டுமே எம்மால் தீர்மாணிக்கப்படுகின்றது. நாம் ஒரு குழுவில் எம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதென்பது எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நாமும்  சரி அக்குழுத் தலைமைகளும் சரி குழுவின் முக்கிய கொள்கைகளை மீறாதிருப்பது கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடுகிறது.

நாம் இணைந்துகொண்ட குழுவின் ஒழுங்குமுறைகளுள் நாம் உடன்பட முடியாதவர்களாக இருப்போமாயின், அல்லது எமது கருத்துக்களோடு அக்குழுவினர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலோ எம்மை நாம் அந்தக் குழுவிடம் இருந்து பிரித்து வேறு குழுவொன்றிடம் எம்மை இணைத்துக்கொள்வது அல்லது புது குழு ஒன்றினை சிருஷ்டிப்பது என்பது வெகுசாதாரணமாக ஒரு மனிதன் தனது தேவையை பூர்த்தி செய்வதற்குரிய செயல்களாகும். சில மனிதர்கள் இப்படியான குழு மாற்றங்களை சாதரணமாக செயலாற்றிக் வந்தாலும்;, சிலர் எந்த ஒரு குழுவிடமும் ஒன்ற முடியாத நிலையிலும் வாழ்கின்றனர். எம்மில் பலர் தமக்கும் குழுக்களுக்கும் ஒரு தூரத்தை வைத்துக்கொள்வதில் திருப்தியும் வெற்றியும் கண்டுகொள்கின்றனர்.

 

புறக்கணிப்புகளுக்கும், சமூத்திலிருந்து ஒதுக்கபடுதலுக்கும் நாம் அச்சபடுகின்றோம். நாம் யாருக்கும் விருப்பில்லாதவர்களாக போய்விடுவோமோ என்பது எம்மை அச்சமுட்டுவதயிருக்கிறது. தவிர பிறர் எம்மீது வைத்திருக்கும் விருப்புநிலையை தக்கவைத்துக்கொள்ளவதற்காய் மனிதர்கள் நாம் செலவழிக்கும் சக்தி அளவிடமுடியாதது. நாம் ஒரு விருப்புக்குரிய நபராகத் திகழ்வதென்பது மனிதர்களின் விருப்புவாழ்வியலாக இருந்து வருகின்றது.

 

மனிதர்கள் தம்மைத்தாமே பெரிதாக நினைத்துக்கொள்பவர்களாக இருப்பதனால்தான் அவர்களுடைய வளர்ச்சி தடைப்பட்டுப் போய்விடுவதாக டேன்மார்க்-நோர்வேஜிய எழுத்தாளரான அக்ஸ்சல் சண்தமூச தெரிவிக்கின்றார்.

 

மனிதச் சுடுகாடென்பது வாழ்நாள் முழுதும் மனிதர்களால் சேமிக்கப்பட்ட சிந்தனைகளின் உலகப்பெரு வங்கி. தம்மைவிடச் குறைந்த சிந்தனைவளமுடைய மனிதர்கள் கொடுக்கும் மன அழுத்தங்களாலும், பிறருடைய விமர்சனங்களிற்குப் பயந்ததினாலும், வளரமுடியாது போன மனிதர்களின் சிந்தனைகள் எல்லாம் பூப்பதற்கு முன்பே புதையுண்டு போன இடமாக சுடுகாடுகளைக் காண்கிறோம். எம்மைச் சுற்றி இருக்கக்கூடிய பலவிதப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே நாம் எம்மை வடிவமைத்தும் கொள்கின்றோம் என்பதே எமது யதார்த்தம். இது நாம் உலகமெங்கும் காணக்கூடிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

 

எமது செய்ககைளும் சரி எமது கருத்து, பேச்சுக்களும் சரி எப்போதும் குறைந்த பட்சமாக பத்து சதவீதத்தினரால் பயணற்றதாகவே கருதப்படும் என்பதை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். உங்கள் சிந்தனைகளை வரவேற்கும் மீதியிருக்கும் 90 சதவீதத்தினரோடு ஒப்பிடுகையில், இந்தப் பத்து சதவீதத்தினர் என்பவர்கள் பிறர் நலன் கண்டு பொறாமைகொள்கின்ற மனிதர்களாக அல்லது மாற்றுச்சிந்தனையுடைய மனிதர்களாக இருப்பர். அப்படி இருக்கும் பட்சத்தில் 90 சதவீதத்தினர் பயனுள்ளதாகக் கருதும் உங்கள் சிந்தனைகளை வெறும் பத்துவீதத்தினரின் கருத்துக்களுக்கும் பேச்சுக்களுக்காகவும் கைவிடுதல் என்பது பெரும் இழப்பாகவே இருக்கும்.

 

மருத்துவக் குறிப்புகளைக்கொண்ட ஒரு நூலை எனது இளம்பருவத்தில் நான் எழுதிய போது அதன் அங்கீகாரத்திற்காகவும், மதிபீட்டிற்காகவும் எனது தலைமை அதிகாரியிடம் கையளித்துவிட்டு. அதன் பிறகு அத்தொகுப்பிற்க்கு மேலதிகாரியுடைய கருத்தையும் உள்வாங்கிக்கொண்டு மேலும் எனது நூலிற்கு வலுவூட்டவேண்டும் என எண்ணியிருந்தேன். பல நாட்களின் பின் எனது நச்சரிப்பின் பேரில் எனது கையெழுத்துப்பிரதியை மீண்டும் நான் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு பார்த்த போது, செந்நிற பேனாவால் அழுத்தமாக அனைத்துப் பக்கங்களிலும் ‘குப்பை’ என்று எழுதப்பட்டிருந்தது. அப்படியான ஒரு மருத்துவ நூலை கொண்டுவரும் சிந்தனை எனது மேலதிகாரிக்கும் இருந்திருக்கிறது என்பதும், அவருக்கு முன்னம் இப்படியான நூலை நான் எழுதி இருக்கின்றேன் என்ற விடயமும் சில தினங்களுக்குப் பிறகு நான் அறிந்து கொண்டதாகும்.

 

பல வருடங்களுக்கு முன் யாகோப் வைடமன் என்ற ஓவியரிடம் எனது ஓவியங்களைக் காட்ட விரும்புகிறேன் என்று சொன்னேன். «என்ன?» என்றார், «நீ படங்களும் வரைவாயா, அப்படியானால் உனது வைத்தியத் தொழிலை நான் எடுத்துக்கொள்கிறேன்» என்றார். அதற்கு நான் கட்டாயமாக உங்கள் தொழிலோடும், உதியத்தோடும் எனதை தொழிலை கைமாற்றிக்கொள்ள நான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன். ஊரில் இருந்த அவருடைய பண்ணைவீட்டில் அக்கலைஞனுடைய பணிமனையாகவும், வாழ்தலுக்கான இடமாகவும் அமைக்கப்பட்டிருந்த அறையொன்றின் மரச்சுவர்களில் எனது ஓவியங்களை வரிசையாய் அடுக்கி வைத்து அவருடைய கருத்துக்காக ஆவலாகக் காத்திருந்தேன். «உனக்குப் பிடிக்காதவர்களிடம் இதை நீ பரிசளிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்» என்றார். பிறகு «நீ நினைப்பது போல ஒவியக்கலை அத்தனை சுலபமல்ல» என்றார். அங்கு வந்த அவருடைய மனைவி தனக்கு படங்கள் பிடித்திருப்பதாகச் சொன்னாலும் அவரோ «இவைகள் சரியில்லை» என்று மீண்டும் சொன்னார். «நீ தீட்டிய வண்ணங்கள் எல்லாம் உலக வழக்குக்கென உண்டுபடுத்தபட்ட செயற்கைமொழி. இப்படியான ஓவியங்களை நாம் நியூயோர்க், பரிஸ், பேர்லின், டோக்கியோ அல்லது எந்த ஒரு நாட்டிலும் வாங்கிவிடலாம். நீ உனது சுயத்தின் குரலைப் பிரதிபலிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியானவைதான் மதிப்பிற்குரியவையாகின்றன. இங்கே வா அவைபோன்றவற்றை நான் உனக்குக் காட்டுகிறேன்.» என்றார்.

 

நான் கண்ட இந்த இரு மதிப்பீட்டாளர்களிடமும் காணக்கூடிய வித்தியாசம் என்ன என்றால், ஒருவர் என்னுடைய படைப்பை நிறுத்துவதற்குரிய மொழியைப் பேசினார். ஒருவர் எனது படைப்பாற்றலை மேம்படுத்துவதற்குத் தனது கருத்துக்களைக் கூறினார் என்பதேயாகும். இப்படியான நபர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் அணுகுமுறைகளை நாம் கண்டறிவது மிக அத்தியாவசியமானது.

 

நாம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவோமா என்ற மனப்பயம் என்பது மனிதர்களை உயரத்திற்கு இட்டுச்செல்லாமல் பல சமயங்களில் முடக்கிவிடுகிறது. உங்களைவிட குறைந்த சிந்தனைவளர்ச்சியைக்; கொண்ட மனிதர்கள் உங்களை தடைப்படுத்தாத அளவிற்கு உங்கள் பாதைகளை நீங்கள் சீர்அமைத்துக் கொள்ளவேண்டும்.

 

வளர்ந்து வருபவர்களை குட்டிஅமர்தும் கலையில் கைதேர்ந்த மனிதர்களால் தடைப்பட்டுப்போன எத்தனையோ மனிதர்களைக் கண்டு வியப்படைகின்றேன். யதார்த்தத்தில் உங்கள் வளர்ச்சியில் தொடர்ந்து நீங்கள் வெற்றி பெறுவதை விரும்பாதவர்கள்கூட தங்களை நண்பர்கள் போலவே காட்டிக்கொள்கின்றனர். உங்களுடைய நட்பை இழந்துவிடும் அச்சம் கூட அவர்களுடைய காரணமாக இருக்கக்கூடும். ஏனென்றால் வளர்ச்சியென்பது உங்களுக்கும் நண்பர்களுக்கும் இருக்கக்கூடிய இடைவெளியின் அளவை அதிகப்படுத்தி அவர்கள் நிற்கும் இடத்தைத் தாண்டி நீங்கள் பயணப்படுவதாயே இருக்கும். ஆனால் உண்மையான நண்பர்கள் நட்பு மறந்து தாண்டிச்செல்பவர்களாக இருக்கமாட்டார்கள். உங்கள் வளர்ச்சியின் மேல் பொறாமை, எரிச்சல் என்ற குணங்களை வளர்த்துக் கொள்ளும் நட்புகளையும், உங்கள் முதுகின்பின் பேசிதிரிபவர்களையும் அதே இடத்தில் விட்டுவிட்டு நாம் தாண்டிச் செல்வதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

 

நீங்கள் எந்த விடயத்தைச் செய்தாலும் அதை விட்டுக்கொடுக்காதீர்கள். கிரீன்லாந்து மக்கள் சொல்வது போல, உங்கள் இலக்கிற்கான பயணத்தில் போதும் என்ற களைப்பில் நீங்கள் எப்போது அமர்ந்து விடுகிறீர்களோ அப்போதுதான் நீங்கள் கடக்கக்கூடி அளவின் பாதித்தூரத்தைக் கடந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 

பலர் தமது கனவுகள் கைகூடும் இடத்திற்கு சற்று முன்னதாகவே தமது பயணத்தை நிறத்திக்கொள்கின்றார்கள். பலநாள் உழைப்பிற்கான ஊதியத்தை பெறுமுதல் ஓய்வெடுத்துவிடுகின்றனர். ஒன்று அவர்களுக்கு அதை முடிக்கும் சக்தி இல்லாது போகிறது அல்லது அவர்களது லட்சியம் கண்களில் இருந்து மறையும் அளவு அவர்களை ஏதோ ஒன்று தடைப்படுத்திவிடுகிறது. முடியும் தருவாயிற்தான் நாம் முயற்சித்து முழுசக்தியுடன் முன்னேற வேண்டும். எமது முயற்ச்சியில் நாம் தோற்றுப்போவதும், வெற்றியடைவதும் இந்த இடத்திற்தான்.

 

இதை சுவீடன் நாட்டு கவிஞர் ஹரி புளொம் பர்க் இப்படிச் சொல்கிறார்

குறிப்பாக குளிர்கால இரவுகளில்  துல்லியமான சூரிய உதிப்பிற்குப் அப்பால்தான் புறவைகளின் பாடல் தொடங்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தனது ஆராட்சியின் ஆரம்பகாலத்தில் எரிவிளக்கிற்கான தகுந்த பொருளை அல்லது வழியை தொமஸ் எடிசனால் கண்டுபிடிக்க முடியாமற்போனதால் “உனது கண்டுபிடிப்பு முயற்சியில் 1200 தடவைகள் தோற்று போயிருக்கிறாய்” என புகழ்பெற்ற ஒரு விமர்சகரால் எடிசன் விமர்சிக்கப்பட்டார். “தோற்றுப் போகவில்லை, எரிவிளக்கிற்குப் பாவிக்க முடியாத 1200 வழிகளை நான் கண்டறிந்திருக்கிறேன்” என்றார் எடிசன். ஒருமுறை அவருடைய ஆய்வுக்கூடம் முழவதுமாய் எரிந்து போனதொரு தருணத்தில் எடிசன் கவலையுடன் தனது தோல்விகள் கூட சாம்பலாகிவிட்டன என்று கூறியிருக்கிறார். அதற்கு “மனஎழுச்சியைக் கைவிடாத முயற்சிகளுக்கு தோற்கடிப்புக்கு மேல் தோற்கடிப்பு என்பது பெரும் வெற்றி” என்றார் வின்ஸ்டன் சேர்சில்;.

 

நோர்வேயைச் சேர்ந்த இசை வல்லுனர்களாகிய தூர் ஏரிக் ஹர்மண்சென், மிக்கல் ஏரிக்சன் என்பவர்கள், உலகத்தில் உள்ள பெரும் படைபாளிகள் தம்மை கண்டுபிடித்து வளர்த்தெடுப்பார்கள் என்று அவர்கள் காத்திருக்கவில்லை. தமது குடும்பத்தாருடன் அமெரிக்கக் கண்டத்திற்கு இடம்பெயர்ந்து தமது பாதையைத் தாமே போடத் தொடங்கினர். இன்று உலகப்புகழ் பெற்ற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த வெற்றிபெற்ற தயாரிப்பாளர்கள் என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றனர்.

 

ஆயிரத்தில் ஒருவர்தான் இப்படியாக வெற்றி பெறுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் முயற்சியே எடுத்துக்கொள்ளவில்லையெனில் தோல்வி மட்டுமே உங்களுக்கு நிச்சயமாகிறது. …

 

கல்லூரிகளில் திறமைமிக்க மாணவர்கள்தான் வாழ்க்கையிலும் உத்தியோகத்திலும் வெற்றி பெறுபவர்களாக இருப்பார்கள் என்பது இல்லை. கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் அனேகம் பேர் ஒரு சிறந்த உத்தியோகத்தில் அமர்த்தப்படுவார்களே தவிர அவர்கள்தான் எதிர்கால சமூக வளர்ச்சிக்குரிய குணாதியங்களைக் கொண்டிருப்பார்கள் என்றும் இல்லை.

 

பெரும் அறிவும் அனுபவமும் கூட பல நேரங்களில் எமக்குத் தேவையான தீர்வுகளைக் காண தடையாக இருந்துவிடுகின்றது நாம்  படித்த ஒழுங்குமுறையிலிருந்து சிந்திப்பதும் சில நேரங்களில் தீர்வைக் காணமுடியாததற்கான காரணங்களுள் ஒன்றாகிவிடுகிறது. பல நேரங்களில் எமக்குத் தெரிந்த விடைகளில் இருந்து நழுவி வேற்று வழியில் சிந்திப்பதும், வேறு கோணத்தில் பார்வையைக் கொண்டு செல்வதுமே தீர்வாக இருந்துவிடுகிறது.

 

ஏற்கனவே நாம் கற்ற வழிகi; மேலும் சீர்அமைப்பது என்பது வேறு. புதிய வழிமுறைகளைக் காண்பது என்பது வேறு. எமது பழைய வழிகளை அழிப்பதிலேயே புதிய வழிகளை நாம் கண்டடைய முடியும். ஒன்றை அழிப்பதிலிருந்துதான் ஒரு மனிதனின் படைப்பாற்றல் தொடங்குகிறது என்பது உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோவினுடைய கருத்தாகும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றை எடுத்து அப்புறம் வைத்தபின்தான் நாம் வேற்று வழிகளையும் புதிய நடைமுறைகளையும் தோற்றுவிக்க முடியும்.

 

எமது வாழ்க்கைமுறையையும் வாழ்க்கையின் சீரான நகர்வுகளையும் நாம் கண்டுகொள்ளும் இடத்தில் அவைகள் தற்காலிகமான மாற்றமாக இருக்குமோ எனத் தடுமாறாமல் நிரந்தமாக தன்னிச்சையாக நாம் இயங்கப் பழக்குதல் வேண்டும். எமது குணங்களை நாம் மாற்றத் தொடங்கும் போதே புறத்தோற்றத்தையும் நாம் மாற்றியமைத்தல் என்பது அவசியமாகிறது. எமது நாளாந்த செய்கைகளே நாமாகின்றோம். பெரும் திறன் என்பது கூட பழக்கத்தில் வரும் ஒரு விடயமே.

 

எங்களிடம் இருக்கக் கூடிய வாய்ப்புகள், வரம்புகளுக்கேற்ப நாம் அனைவருமே வெற்றியாளராகலாம். நாம் விரும்பினால் யாரும் வெற்றியாளராகலாம். இந்தக் கூற்றின் அர்த்தம் என்பது உங்களைச் சுற்றியுள்ள வேலிகளையும், சூழல்களையும் பிடுங்கிப் போட நீங்கள் தயாராக இருக்கவேண்டும் என்பதே. நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம் மட்டும் அல்ல உண்மையிலேயே வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியான மனம் உங்களிடம் இருக்க வேண்டும்.

 

வாழுதற்கலை என்ற நூல் வெளியான போது, ஒரு மனநலநிபுனரிடம் இருந்து, நான் எழுதிய “நாம் விரும்பினால் யாரும் வெற்றியாளராகலாம” என்ற கருத்திற்கு கூர்மையான விமர்சனங்கள் வந்து வீழ்ந்தன. “உலகத்தனைவரும் ஒலிம்பிக்ஸில் பங்குகொள்ளப் போகின்றனரா என்ன?”  என்று கேட்டிருந்தார் ஒருவர். வெற்றியாளர்களைத் தோற்கச்செய்வது அல்ல எனது நோக்கம். தோல்வியாளர்களிடையே வெற்றிகாண விரும்பும் வெற்றியாளர்களை உருவாக்குதலே எனது நோக்காகும். வெற்றியாளர்கள் தன்னை தான் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள் தவிர தனக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தேடி தனக்கு  சாத்தியமாக்கிக் கொள்பவராக இருப்பார்கள்.

 

நாம் எமது பாதைகளைக் கண்டு பயணத்தைத் தொடங்கியபின் நம் அருகில் இருப்பவர்களை அங்கேயேவிட்டு விடாமல், நாம் சில படிகளைக்கடந்தவுடன் நாம் எறிவந்த கயிற்றினை அவிழ்த்துவிடாமல், எமக்கு அடுத்து வருபவர்களுக்கும் பயணளிக்கும் வண்ணம் எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும். புகழ்ச்சியிலும், பணத்திலும், நேரத்திலும் தாராள மனப்பான்மை இருக்க வேண்டும். தற்புகழ்ச்சிகளைக் குறைத்து மற்றவர்களுடைய திறமைகளையும் கவனித்தல் வேண்டும். நாம் எமது நிலைகளையும் பிரச்சனைகளையும் மட்டுமே பேசித்தீர்க்காமல் மற்றவர்களின் நலனையும் மனநிலையையும் அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். நாம் ஒரே இடத்திலே தனிமையில் தொலைஇயக்கிகளுடன் நமக்கு நாமே அமர்ந்துவிடாமல், எம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் எமது நேரத்தை பகிர்ந்து கொள்வதும் முக்கியமானதே. நாம் என்று நான் குறிப்பிடும்போது உண்மையாகவே நாம் என்ற அர்த்தத்திலேயே குறிப்பிடுகின்றேன்.

 

வெற்றியாளர்களின் பண்பியல்புகளை நாம் கவனித்தோமானால், வெற்றியாளர்கள் இந்த உலகத்தினை வாழ்வதற்குத் தகுந்த இடமாக ஆக்குகின்றனர். வெற்றியாளர்கள் எப்போதும் பெறுமதியான இலக்கிற்காகவே ஒருவனுடைய முயற்சி பயன்படுத்தப்படுத்தவேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். வெற்றியாளர்கள் அபாயங்களை எதிர்நோக்கக்கூடியவர்கள். எப்போதும் எக்காரணத்திற்காகவும் தம் முயற்சியைக் கைவிடாதவர்கள். எந்த இடத்திலும் பொறுமை காப்பவர்களாகவும், அனுசரிப்புக்குணம் கொண்டவர்களாகவும் திகழ்வார். தமது தோல்வியின்போது மற்றவைகள்மீது பழிபோடும் சாதாரண குணம் அவர்களிடம் இருக்காது.

 

 

மனிதர்களான நாம் யாவரும் ஒரே பெறுமதி  உடையவர்களே.

ஒரு பொறுப்பான செயற்பாட்டை நோக்கி வேலை செய்பவர்களே வெற்றியாளர்கள். வெறும் ஊதியத்திற்காக வேலை செய்பவர்கள் அதிகஅளவில் பணத்தைச் சம்பாதிக்கும் திறமையுள்ளவர்களானாலும் ஊழியர்களாகவே இருப்பர்.

 

உண்மையான வெற்றியாளர்கள் நல்ல மனிதர்களாகவும், பிற மனிதர்களுக்கு இருக்கக்கூடிய குறைபாடுகளை அறிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பர். சகமனிதர்களையும், சமூகத்தையும் என்றும் நினைவில் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பர்.

அமெரிக்க எழுத்தாளரான லெஸ் ப்ரௌன் ஸ்கில்லர் மூன்று விதமான மனிதர்களை சுட்டிக் காட்டுகிறார்.

வெற்றியாளர்கள், தமது மனதை, திறனை, வாய்ப்புகளை உணர்ந்தவர்கள். இவர்கள் தமது வாழ்வை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பார்.

தோழ்வியாளர்கள், தாம் யாரென்பதையும், அவர்களுடைய சுயமதிப்பையும் அவர்களே உணராதவர்கள். தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும் நோக்கமற்ற, பெறுமதியற்ற நிகழ்வுகளும் தமது வாழ்வை பாதிக்க அனுமதியளிப்பவர்கள்.

 

மறைந்திருக்கக்கூடிய வெற்றியாளர்கள், தன்நம்பிக்கை குறைபாடுள்ள இவர்களுக்கு, நீங்கள் வெற்றியாளராகக்கூடியவர் என்று யாராவது உந்துதல் அளிக்க வேண்டியிருக்கிறது. தமது வாழ்வில் ஏதோ ஒன்றிரண்டு தருணங்களில் இவர்கள் தவறிழைத்திருக்கக்கூடும். சில தடைகள்;, வாழ்க்கைத் துணையுடனான முறிவு, பெற்றோர்களுடைய ஆதரவின்மை, நோய் அல்லது நீண்டகால மனஅழுத்தம் என்பவை இவர்களை தடைப்படுத்திவிடுகிறது.

தமது பாதையைத் தொலைத்த மனிதர்களுக்கு நாம் வழிகாட்டுவதும், அவர்களை மீண்டும் எழுந்து நிற்க வைப்பதும் சகமனிதர்களான எமது கடமையாகிறது. தமது சொந்தக் கால்களையே பூமியில் ஊன்ற மறுப்பவர்களுக்கு நாம் ஊன்றுகோல் கொடுத்துதவுவதும் பயணற்றது.

காடுகளில் ஒரு ஒளி இருக்கிறது இங்கு கட்டற்று அலைந்து திரிந்தவர்களுக்கு மட்டுமே அவ்வொளி தெரிகிறது

 

தாம் என்ன செய்யவேண்டும் என்பதும் அதற்கு இருக்கக்கூடிய அபாயங்களையும் தெரிந்து வைத்திருந்தாலும் மனிதர்களில் பலர் தமது வளர்ச்சிக்குரிய உந்துதலற்று இருந்துவிடுகின்றனர். ஆனாலும் தாம் செய்யத் தயாராக இருப்பதாகவும், அதற்குரிய நேரமும் காலமும் அமையவில்லை என்றும் கூறிக்கொண்டே இருப்பர். காலங்கள் எமக்காக அமையும் சமயங்களில் நாம் அதைப் பயண்படுத்திக்கொள்கிறோமா இல்லையா என்பதே நமது வெற்றியையும் தோல்வியையும் பெரும்பான்மை நேரங்களில் நிர்ணயிக்கிறது. அடுத்த புகையிரதம் வருமா என்ற நிச்சயமில்லாமல் புகையிரத்தளத்தில் நின்று பகல்கனவுகள் காண்பதைவிட, வரும் புகையிரதத்தில் நாம் ஏறிக்கொள்ளவதே புத்தியுள்ளவர்கள் செய்யக் கூடியது. அடுத்த புகையிரதம் வருமா என்ற நிச்சயமில்லாமல் புகையிரத்தளத்தில் நின்று பகல்கனவுகாண முடியாது.

 

சில நேரங்களில் நாங்கள் யதார்த்தங்களின் மேல் இடறிவிழக்கூடும். அப்போதெல்லாம் எழுந்து தொடர்ந்து எம்மை நகர்;த்திச்செல்ல வேண்டும்.

உங்களுடைய நடைமுறை வாழ்வின் தன்மை உங்களுடைய எதிர்பார்ப்புகளையே மிஞ்சுபவைகளாக இருந்தால், அவை சுய தோற்கடிப்புகளுக்கான நடப்புக்கு இடமளித்துவிடக்கூடும். தோல்விக்கான இடம் எப்படி வெற்றியிலும் இருக்கிறதோ அதேபோல வெற்றிக்கான இடம் தோல்விகளிலும் இருக்கவே செய்கின்றது. வெற்றிப் படிகளில் நாம் நகரும் போது அதற்கேற்றாற் போல மனவளர்ச்சியையும் நாம் வளர்த்துக்கொள்வதன் மூலம் மேலும் பல வெற்றிப்படிகளை நோக்கி நாம் நகரக்கூடும்.

 

கடந்த நாட்களை எப்போதும் நாம் நினைவில் வைத்து எதிர்வரும் காலங்களை படைத்தலுக்கும், ஆக்குதலுக்குமான ஒன்றாக கொண்டு, இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை நாம் கண்டு கொள்ள வேண்டும்.

 

பின்நோக்கிச் சென்ற காலங்களைப் போலவே முன்நோக்கிச் செல்லுதல் என்பதும் தற்காலிகமானதே. நற்சுயமதிப்பும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு வரும் தோல்விகளும் அதைப்போல தற்காலிகமானதே. வானை நோக்கித் தன்னை மலர்த்திக்கொள்ளத் தயாராகும் தாமரைவிதை தன்னைச் சேற்றில் புதைத்துக்கொண்ட பின் பூவாய் விரிதல் போலதான் இவைகளும்.

 

உயர்ந்த பண்புகளை வைத்திருங்கள். பண்புகளைக் கொண்டவர்கள் எப்போதும் பிறரிடமிருந்து உயர்பண்புடைமைகளைப் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். நற்குணங்களைக் கொள்வதொன்றும் அச்சுறுத்தலுக்கு உரியதல்ல. நற்பண்புகளை கொண்டவர்களிடம் நாமும் பண்பாக நடந்துகொள்ளுதல் என்பது பொதுவாக ஒரு பயனை எதிர்நோக்கிய பண்புதான். வெறும் பயன்களை எதிர்பார்த்து நற்பண்புடன் திகழாதீரகள். உண்மையாகவே விரும்பி நற்பண்புடன் வாழக் கற்றுக்கொள்வோம்.

 

 

உங்கள் கனவுகளையும், உங்கள் வெற்றிகளையம் உங்களுடனேயே எடுத்துச் செல்லுங்கள். ஆனால் பிறருக்கும் உங்களால் மகிழ்வை உருவாக்குங்கள். உங்கள் முகக்கண்ணாடியில் உங்கள் விம்பத்தை இலகுவாகக் கண்டுகொள்ளுதற்குரிய வழிகளை நீங்களே கண்டறியுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக