மே 22. 2010உம் கவிதாவின் கவிதைகளும் -சஞ்சயன்
மே 22. 2010 நேரம் 23:50 இடம்: ஒஸ்லோ அவசர நோயாளர் வைத்தியசாலை (Olso legevakt) இன்றைய நாள் நல்லாகத் தான் விடிந்தது மலர்ந்தது. மாலை வரை பிரச்சனையேஇல்லாமல் சிவனே என்று போய்க் கொண்டிருந்தது. அதிசயமாய் கொம்பியூட்டர் திருத்தச் சொல்லி எனது கம்பனிக்கு ஆடர்வரமலிருந்தது இன்று. முன் மதியம் நட்பு ஒன்றுடன் குறொன்லான்ட் என்றும் புறநகர்ப் பகுதிக்கு போய்வந்தேன். மதியம் ப்ளாக் இல் எழுதினேன். மாலை காவிதாயினி கவிதாவிடம் இருந்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் (காசுகொடுக்காமல்) கொண்டு…







