குகை மா புகழேந்தி – ஒரு மனிதன் உணரக்கூடிய அற்புதமான உணர்வு காதல் – பகிர்வு 10
யாருமற்ற நிசப்த இரவில் போரும் வாழ்க்கையும் நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளைக் களைந்துவிட்டு அமைதியாய் சில நொடிகளை எமதாக்கிக்கொள்ளவதென்பது அரிதானது.இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை நல்லதொரு இலக்கியப் படைப்பினால் கொடுக்க முடியும். சில மணிப்பொழுதுகளானாலும் இந்த அமைதியை தரவல்ல சக்தியைக் கொண்டது காதல்க் கவிதைகள். இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே…









