கறுப்பு வெள்ளைக் கனவுகள்!
மாலை நேரம். சினேகிதி வீட்டிலிருந்து கிளம்ப மனமற்று கதிரையோடு உறைந்து போயிருந்தேன். மனம் இலகுவாக இருந்தது. எனது மகனும் அவனுடைய சினேகிதனும் விடியோ விளையாட்டில் மூழ்கிப்போயிருந்தார்கள். வெளியே வானம் மிருதுவான மழைத்துமிகளை தூவிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் போனால் வெளியில் சில பூச்செடிகள் வைக்க வேண்டும் என்பது இன்றைய எனது திட்டமாக இpருந்தது. போகும் போதே எந்த நிறத்தில் என்ன செடி வாங்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் போகும் வழியிலுள்ள பூக்கடையில் வாங்கிப் போகலாம். ஆகக் கூடி இங்கு இன்னும்…









