தாழ் உடைக்கும் கவிதைகள் – பேராசிரியர் சண்முகரட்ணம்

  “கறுத்தபெண் – நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்” பேராசிரியர் சண்முகரட்ணம் அவர்களுடைய அணிந்துரை. “இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்.” தாழ் உடைக்கும் கவிதைகள் கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக்…

என் ஏதேன் தோட்டம் பற்றி….. (2008) -அறிவுமதி

உயர்மலைக் காட்டின் உள் மௌனம் அடைகாத்த இருட்டின் ஓடுடைத்துப் பறக்கிற ஒளிப்பெண்களின் காலமிது. உழைப்பு விலக்கி உணர்வு விலக்கி பாடல் விலக்கி ஆடல் விலக்கி உள்படர்ந்து சுடர்விடும் காமம் விலக்கி உடைந்து பேசும் மொழி விலக்கி ஊமைகளாய் உள்ளொடுங்கி வாழ்ந்த பெண்களின் காலம் பெருமழைக் காற்றுப் பிடித்தலுக்கும் அதிர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலாத வேப்ப மரத்துப் பில்லுளிச் செடியாய்ப் பிய்ந்து பறக்கிறது. பாடலும் ஆடலும் வற்றிய உடல்களுக்கு சுயம் வாய்க்காது சூரியன் வாய்க்காது வானமற்ற சிறை இருளே வாய்க்கும்…

தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009

தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009 ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்! இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார், யார் எந்தையும் இலமே!” என்பது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் பெண் மக்கள் பாடிய பாட்டு. —– சங்க இலக்கியத்தில் என்னை மிகவும் பாதித்த பாட்டு இது! படரத்துடித்த ஒரு பூங்கொடிக்கு தன் தேரையே பரிசாகக் கொடுத்த பார்வேந்தனின் மகள்-இன்று-…

நந்திபோலொரு இடைமறிப்பு! பானுபாரதி

பனிப்படலத்தாமரை முகவுரை – பானுபாரதி 2006 ——————————————————— புகலிடத் தமிழ்படைப்புலகில் பெண்களின் பிரவேசம் முன்னெப்போதையும் விடவும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நாடகம், பத்திரிகை, குறும்படம் என கலை இலக்கியத் துறைகளில் பெண்கள் தம் ஆளுமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களது பிரச்சனைகள் பெண்களாலேயே வெளிக் கொணரப் படுகின்றன இது பெண்ணியக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகும். இருந்த போதிலும் இன்னமும் மறுபுறத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தொடர் வரலாறாய் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் சுதந்திரம்(?)…

ஞானம்தேடிச் சென்றவர் கதை

ஒருவனுடைய தலைகள் அந்தக் கூடைமுழுவதும் விற்பனைக்கென நிரம்பிக் கிடக்கிறது கடைகளில் எல்லாம் அதே தலைகள் கவனத்திற்குரிய தற்கால அழகுப்பொருள் இந்தத் தலைகள்தான் முண்டத்தின் தேவை அற்றுப்போனதோ முழுமை விட்டுப்போனதோ சுயத்தை முழுதாய் இழந்த தலைகள் இவைகள் எதற்கும் தயாராயிருக்கின்றன ஒரு கொரூரத்தோடு வீட்டின் முலைமுடுக்குகளில் இடமாற்றிக்கொண்டே இருக்கிறேன் தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடியில் சமயலறையின் நாற்றம் விரட்ட வைத்த மெழுகின் அருகில் காலணிகள் கழட்டும் கீழ்படிக்கட்டின் மூலையில் சின்ன அழகியல் காட்ட வரவேற்பறையில் சுவரின் நிறத்தோடு ஒத்துப்போக அம்சமாக…

உனக்கான எனது இரண்டாவது கவிதை

                      மகனே! ஒரு வைத்தியனைப்போல வக்கீலைப்போல விவசாயியைப்போல நீ தொழிலாளியாகலாம் அல்லது விளையாட்டு வீரனாகவோ முதலாளியாகவோ கலைஞனாகவோ எழுத்தாளனாகவோ ஒரு தேசாந்திரி போல இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோ நீ உருவாகக்கூடும் எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாக அகிம்சைவாதியாக சோசலிசவாதியாக கடும்போக்காளனாக ஜனநாயகவாதியாக சமூகப்போராளியாக அல்லது இவையற்ற வேற்றொரு கொள்கையைக் கொண்டிருக்கலாம் உனது தேர்வுகளில் தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய் கிருஸ்தவனாய் இஸ்லாமியனாய் பௌத்தனாய் அல்லது கடவுள்…

உனக்கு நான் எழுதிய முதற்கவிதை

  முதல்முறை எமது பிரிவு நிகழ்ந்தபோது கருவறையிலிருந்து நீ பிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீ புறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்ட அந்த இரவின் தீப்பொறி போல் பிரிவு நிகழ்தலின் மனச்சலனம் தாக்கிய வடுக்கள் முதல்முறை என்னுள் நுழைந்தது கண்ணே! என் விரலினூடு நடந்த நீ கைகளை உதறிக்கொண்டு உலகை தனியாக அளக்கத் தொடங்கிய அதிர்வும் துளிர்க்கும் கண்களோடு விடைபெறும் நீ… அன்று திரும்பிப்பாராமல் ஓடிய நிமிடம் என்மீது எறியப்பட்ட திகைப்பும் கண்ணாடிச் சாரளத்தனூடு தொடரும் உன் கையசைவுகள்…