குழந்தைப்போராளி
சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்
சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்
உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள் நட்சத்திரங்களை சலங்கையாக்கி சிறுமி ஆடிக்கொண்டிருந்த பொழுதில் சிற்பிகள் வந்தார்கள் சிறுமியின் ஆற்றலிலும், ஆடலிலும் வனப்பிலும் அவளை தம் பெண்தெய்வங்கள் வீற்றிருந்த கோவில்களில் வாஞ்சையோடு மீண்டும் சிற்பம் வடிக்கத் தொடங்கினர் பெரும் பாறைகளின்று பெயர்த்து தன்னிலிருந்த துகள்களைத் தட்டியபடி உங்கள் உளியை என்னிடம் தருவீர்களானால்…
இந்த அற்புத நகரத்துள் நீங்கள் வந்ததுண்டா இங்கேதான் மழைப்பெண்ணாக அழகிய மகள் ஒருத்தி பல்லாயிரம் ஆண்டுகளாய் வாசம் செய்கிறாள் தனது நகரத்தின் சுவர்களை அழகுணரத் துளிர்க்கத் துளிர்க்கத் பெருவெளிகளாலும் மழைத்துளிகளாலும் மிளரச்செய்கிறாள் பேதமற்ற மனித குழந்தைகள் குதித்தாட நீர்தேக்கங்களை நகர வெளியெங்கும் சமைத்து நீர்ப்பெண்ணாய் ஊறிவருகிறாள் அடைமழையில் மூழ்கத்தானே செய்யும் காகிதக்கப்பல்கள் காற்றலையும் சேலையோடும் தலைப்பூவோடும் சமயங்களில் முள்ளந்தண்டில் சிறகு முளைக்க தன் நகரம் தாண்டியொரு பறவையாகி கடல்மேவிக் வெளியோடு கரைந்துபோகிறாள் கண் எட்டும் தூரம்வரை அவளது…
நாம் உரையாடத்தான் எத்தனை நினைவுகள்! சிறுகச்சிறுகக் கிளம்பி மேலெழுந்து கரைமோதி விழும் அலைகளென சாமம் மூழுதும் பேசிக்கிடந்தோம். கர்த்தரின் கைஆட்டுகுட்டியின் கண்கள் திடீரென கிடைத்த ஒரு முத்தம் காலாவதியான காதலனின் முகம் கடந்துபோன பால்யகாலத்துக் கனவுகள் அது தரும் புன்னகை கதிகலங்கக் காயப்படுத்திய அற்புத மனிதர்கள் என்னை எதிர்த்து, அடித்து என்னை முழுதாய் அறிந்தபின்னும் கையோடு பயணிக்கும் கிறுக்குத் தோழி விசித்திரமாதுதான் உலகம். காற்றலையும் இறகினைப் போல நதியோடு போகும் ஒரு இலையினைப் போல வேறொன்றுமில்லை வாழ்க்கை
வள்ளுவா! உன்னுடன் கொண்ட முரண்பாடொன்று முறிந்து விட்டது உண்மைதான் ஓம் நான் பெய்யெனப் பெய்யும் மழை! வெள்ளம் பெருகும் உடைந்தோடும் வரப்புகள் வழிந்து தணியும் வையம் பரந்த உலகழித்த தோழர்களே… நீர் சமைத்த பெண்ணொடுக்கி ஒற்றையடிப்பாதையுடைத்து வழி நெடுக பிராய்ந்தழித்து கரை மருவிக் கலகம் செய்யும் நதியாக எனது மழை நுழைகிறது கலைந்த கூந்தலோடு உம்மையும் பெண் கற்பைப்பாடும் உம்மொத்த புலவர்களையும் பிடுங்கியெறிய என் மழை எழுகிறது புரண்டோடும் இப்பெருவெள்ளம் ஒர்நாள் அடங்கும் மானுடம் குதித்து விளையாடும்…
பெருவானம் மறைத்த இறுதிப் பௌர்ணமியின் ஒளிர்வுடன் வந்த உன்னையும் மண்நுழைந்து வேர்களினிடையில் புகுந்ததொரு சொட்டுப்போல பூமியின் விரிந்த பிரதேசமெங்கும் கொட்டித் தீர்த்த உன்னையும் வீட்டின் புதர்களிலும் பூக்களிலும் படர்ந்து தொட்டு வீசி வரும் கணநேர காற்றோடு கண்ட உன்னையும் எங்கிருக்கிறாய் என்று நான் கேட்கலாமா? யாதொன்றும் இல்லாத காலங்களில் அமைதியறுந்து யுத்தத்திற்குத் தயாராகி எழுந்து விரிகிறது ஒரு பறவை நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும் காற்றின் படர்வுமற்று உணர்வு தொலைத்த கவிதைவரிகளைத் தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி விரித்த…
தேவாலயச் சுவரோரம் ஒளி உமிழும் மெழுகுகளின் நீள்வட்ட தீக்குஞ்சுகளின் ஓளிர்வோடு உன்னிடம் பேசவென வெறுவெளியில் புகைந்திருக்கின்றன தோழமைக்காலங்களுக்கான வார்த்தைகள் இப்போதுதான் வேலைமுடிந்து வந்தேன் மழைப்பதத்தின் ஈரத்தோடு நிகழ்கிறது கருவறையிலிருந்து விடுபட்ட குழந்தைகளின் அலட்டல்கள் இங்கு வெளிப்புற ஜன்னல்க் கண்ணாடியில் இடைமறிக்கப்பட்டு பூமிபுணர இறங்கிய மழை ரேகைகள். அழகாய் விடிந்துபோகிற இரவு. சாத்தியங்களுடன் தாவிச்செல்லும் நாட்களையும் புறம்தள்ளி தவிப்பு நிறையும் வெளிகளின் நெளிவு அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார் மகனின் வீட்டுப்பாடத்தோடு நான் அமர்ந்திருந்தேன் கடல்மணலை அளையும் தருணம்…
என் அம்மா தீர்க்கமானவள் அதிக தன்நம்பிக்கை அவளுக்கு மூர்க்கமானவள் கொஞ்சம் ஆணவம் நிறைய அதிகாரம் அவளுடன் மல்லுக்கட்டுவதே வழக்கம் மண்டியிட்டதில்லை… அவள் எனக்குச் சொல்லித்தரவில்லை! உலகில் இருக்கும் எல்லாத் தாய்களையும் போல அவள் ஒரு மனுசியாய்தான் இருக்கிறாள் அவளைச்சுற்றி எந்தக் கோயில்களும் என்னால் கட்டப்படவில்லை தூசியும் குப்பையுமாய் இரைந்த கூரைவீட்டில் கோபத்தோடும், சோகத்தேடும் கோப்பையில் உள்ளவற்றை அன்போடும் அழுக்குத் துணியோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் எனக்கு முக்கியம் அவளுக்கென்றொரு கோபம் அகந்தை வெளியுலகு நட்பு காதல் காமம் ஆளுமை…
துணிவப்பிய முகத்தோடு நான் வெளிக்கிளம்பினால் முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய் எதிர்பை உடுத்திப் புறப்பட்டால் சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார் அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளை பிறாண்டி எடுத்து பேசத் தொடங்கினால் பெண்ணாக இரேன் என்கிறான் தம்பி மனுசியாய் இருக்க யாருக்கு மனுப்போட என சர்ச்சித்தால் பிரளயத்திற்கு பிறந்தவளே உட்கார் என்கிறான் திருப்தியற்று, கணவன் பெருந்திசைகளில் நான் எங்கிருந்தாலும் முலைகளையும் பெண்குறிகளையும் முதலிற்கண்டு, எனக்கே காட்டி ”இவை நீ“ என்கிறார் பிரபஞ்சம் வியக்க இவர்களை…
ஒற்றைச்சூரியன் ஒரு நிலவு ஒரு உலகு ஒரே காதல் என்பது பொய் எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான் கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான் எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ உலகங்கள் இருக்கலாம்; ஒரே காதல் என்பது ரகசிய நகரம் ஒரே காதல் என்பது மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி உடையாதவரை எந்தப் பேய்களும் கிளம்புதற்குரிய பீதியில்லை மனித இனத்தின் யதார்த்தங்களை இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின் நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன கதவின் பின்புறத்தில்…