பனிப்படலத்தாமரை

பனிப்படலத்தாமரை (கவிதைநூல்) 2007 கவிதாவின் படைப்புலகப் பிரவேசம் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுயள்ளது. அவரது குழந்தைப்பருவம்முதல் நோர்வேயில்தான் நகர்தப் பட்டிருக்கிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எமது மண்ணிலிருந்து அனுபவித்தவரல்ல. ஆனாலும் அவரது கவிதைகளில் தென்படும் பெண்ணொடுக்குமுறை பற்றிய கவிதைகளை நோக்குமிடத்து, இந்தத் தேசத்தில் வளரும் எமது பெண் குழந்தைகள்கூட எமது சமூகக் கட்டுமானங்கள், கலாச்சாரம் என்பதன் பெயரால் திணிக்கப்படும் கருத்துச் சூழலுக்குள்ளும், அதன் தாக்கத்தினுள்ளும்தான் வளர்க்கப் படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது. பானுபாரதி

இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”

எல்லா சுவர்களையும் இடித்து நொருக்கி எல்லைகளற்றப் பெருவெளியில் எவ்விதச் சிந்தனைச்சிக்கலுமற்று விடுதலைப் பெண்ணாய் வீசியெறிந்துள்ள இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”.ஆடல்… பெண்ணான கவிதாவின் மொழி ஆளுமை… சிந்தனைச் செழுமை தாய்மண்வலி… வாழ்விட வாங்கல்… உலக அரசியல்… அனைத்தும் கலந்த சிறப்பு… இவரது கவிதையாடலுக்கான களம் புதிது என்பதை உறுதி செய்கிறது. இவரது கவிதை வெற்றி… தனித்துவம் சூடிச் சிறக்கும் -யுகபாரதி   கல்லாதது கவிதை. கவிதைக்கான இலட்சணங்கள் என்ன என்று இன்னமும் எனக்குத் தெரியாது. யாரிடமும்…

அனுபவங்களை மட்டுமாய் விதைத்துத்தந்த ஒரு தோப்பு அது

கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது. சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது. அரிதாரம் பூசாத அவதாரம் இது! மு.மேத்தா. தொட்டிப்பூ என்னுரை குரும்பசிட்டி என்னும் எனது கிராமத்தை எனக்கே தூரத்தில் ஒரு ஓவியம் போல மங்கலாய்தான் தெரியும். போரும் உறவுகளின் இழப்பும் என்னை மூன்று முடிந்து சில…

ஒரு சருகு, ஒரு துளி மழை சில உடல்மொழி

” தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர். இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.” அணிந்துரை…

கருவறைக்கு வெளியே- நான் பயந்து போய் இருக்கிறேன்

– நான் பயந்து போய் இருக்கிறேன் துப்பாக்கி வைத்துக் கொள்ள ஆசைப்படும் குழந்தை, கரடி பொம்மை வைத்துக் கொள்ளும் வளர்ந்த குழந்தை, பிச்சை எடுக்கும் குட்டி ராஜா என்று புத்தகம் முழுக்க சிறிதும் பெரிதுமாய் குழந்தைகள். பாலியல் கொடுமை குறித்த சில பதிவுகள் முதுகுத்தண்டை சில்லிட வைக்கின்றன. புத்தகம் முழுவதும் இழையோடும் மனித நேயமும் இறுதியில் தமிழ்க் குழந்தையையும் சிங்களக் குழந்தையையும் ஒரே வீட்டில் சகோதரர்களாய் வளர்க்கும் நார்வே தாயும் இந்த புத்தகத்தைக் கீழே வைத்த பிறகும் நம்முடன்…