நிறமற்றுப் போன கனவுகளோடு நோர்வே நாட்டில் ஒரு ஈழத்துக் கவிஞன்
கத்தரிக்கப்பட்ட சொற்களுக்கும் காத்திரமான வரிகளுக்கும் சொந்தக்காரன். கவிஞர் இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. தோழில்நுட்பம் அறிவியல் என்று பல மைல்கல்லைத் தாண்டி வேகமாக பயணிக்கும் இன்றைய யதார்த்த உலகிலும், நெருக்கடி மிகுந்த இந்தத் தருணங்ளிலும் இயற்கை, சூழல், சமூகம் குறித்த குறிப்புகளோடு கவிஞர்கள் தமது அக்கறையையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர். நம் கண்முன் கரைந்து காணமல் போகும் கணப்பொழுதுகளைக் காப்பாற்றி மீண்டும் எம்முன்…








