நீ எங்கிருக்கிறாய்?

பெருவானம் மறைத்த இறுதிப் பௌர்ணமியின் ஒளிர்வுடன் வந்த உன்னையும் மண்நுழைந்து வேர்களினிடையில் புகுந்ததொரு சொட்டுப்போல பூமியின் விரிந்த பிரதேசமெங்கும் கொட்டித் தீர்த்த உன்னையும் வீட்டின் புதர்களிலும் பூக்களிலும் படர்ந்து தொட்டு வீசி வரும் கணநேர காற்றோடு கண்ட உன்னையும் எங்கிருக்கிறாய் என்று நான் கேட்கலாமா? யாதொன்றும் இல்லாத காலங்களில் அமைதியறுந்து யுத்தத்திற்குத் தயாராகி எழுந்து விரிகிறது ஒரு பறவை நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும் காற்றின் படர்வுமற்று உணர்வு தொலைத்த கவிதைவரிகளைத் தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி விரித்த…

உயிர்த்தோழி

தேவாலயச் சுவரோரம் ஒளி உமிழும் மெழுகுகளின் நீள்வட்ட தீக்குஞ்சுகளின் ஓளிர்வோடு உன்னிடம் பேசவென வெறுவெளியில் புகைந்திருக்கின்றன தோழமைக்காலங்களுக்கான வார்த்தைகள்   இப்போதுதான் வேலைமுடிந்து வந்தேன் மழைப்பதத்தின் ஈரத்தோடு நிகழ்கிறது கருவறையிலிருந்து விடுபட்ட குழந்தைகளின் அலட்டல்கள் இங்கு வெளிப்புற ஜன்னல்க் கண்ணாடியில் இடைமறிக்கப்பட்டு பூமிபுணர இறங்கிய மழை ரேகைகள். அழகாய் விடிந்துபோகிற இரவு. சாத்தியங்களுடன் தாவிச்செல்லும் நாட்களையும் புறம்தள்ளி தவிப்பு நிறையும் வெளிகளின் நெளிவு அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார் மகனின் வீட்டுப்பாடத்தோடு நான் அமர்ந்திருந்தேன் கடல்மணலை அளையும் தருணம்…

அம்மா

என் அம்மா தீர்க்கமானவள் அதிக தன்நம்பிக்கை அவளுக்கு மூர்க்கமானவள் கொஞ்சம் ஆணவம் நிறைய அதிகாரம் அவளுடன் மல்லுக்கட்டுவதே வழக்கம் மண்டியிட்டதில்லை… அவள் எனக்குச் சொல்லித்தரவில்லை! உலகில் இருக்கும் எல்லாத் தாய்களையும் போல அவள் ஒரு மனுசியாய்தான் இருக்கிறாள் அவளைச்சுற்றி எந்தக் கோயில்களும் என்னால் கட்டப்படவில்லை தூசியும் குப்பையுமாய் இரைந்த கூரைவீட்டில் கோபத்தோடும், சோகத்தேடும் கோப்பையில் உள்ளவற்றை அன்போடும் அழுக்குத் துணியோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் எனக்கு முக்கியம் அவளுக்கென்றொரு கோபம் அகந்தை வெளியுலகு நட்பு காதல் காமம் ஆளுமை…

எதிர்ப்பின் நடனம்

துணிவப்பிய முகத்தோடு நான் வெளிக்கிளம்பினால் முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய் எதிர்பை உடுத்திப் புறப்பட்டால் சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார் அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளை பிறாண்டி எடுத்து பேசத் தொடங்கினால் பெண்ணாக இரேன் என்கிறான் தம்பி மனுசியாய் இருக்க யாருக்கு மனுப்போட என சர்ச்சித்தால் பிரளயத்திற்கு பிறந்தவளே உட்கார் என்கிறான் திருப்தியற்று, கணவன் பெருந்திசைகளில் நான் எங்கிருந்தாலும் முலைகளையும் பெண்குறிகளையும் முதலிற்கண்டு, எனக்கே காட்டி ”இவை நீ“ என்கிறார் பிரபஞ்சம் வியக்க இவர்களை…

கண்ணம்மாவின் காதலர்கள்

ஒற்றைச்சூரியன் ஒரு நிலவு ஒரு உலகு ஒரே காதல் என்பது பொய் எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான் கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான் எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ  உலகங்கள்  இருக்கலாம்; ஒரே காதல் என்பது ரகசிய நகரம் ஒரே காதல் என்பது மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி உடையாதவரை எந்தப் பேய்களும் கிளம்புதற்குரிய பீதியில்லை மனித இனத்தின் யதார்த்தங்களை இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின் நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன கதவின் பின்புறத்தில்…

பெண்மை விலங்கில்

என்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும் பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு அதற்கும் மேலும் சிந்திக்க இருக்கிறது சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை வெல்ல மொழியும் வழியும் புரிந்து போனதில் மௌணித்திருக்க மறுக்கிறது அது தாயோ என்னை தனதாக்கிக் கொண்டவனோ தொங்கப்போடும் தாலியில் எனது கண்ணியத்தையும் பெண்மையையும் நிரூபிக்க இஸ்டமில்லை நிமிர்ந்தே…

மூலைகள்

இது எனது வீடு. இந்த வீட்டின் ஓவ்வொரு மூலையும் என்னுடையது ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை! இதோ இந்த மூலையில் இரண்டு பாத்திரம், நாலு கரண்டி ஒரு அடுப்பு… எல்லாம் எனது எதிர் மூலையில் எனக்கென்று வாங்கித்தந்த பெரும் இயந்திரங்கள் துணிகள் துவைக்கவும்.. காயப்போடவும்.. ஒவ்வொரு அறையிலும் பெரிய அலமாரிகள் காய்ந்ததை அடுக்கவென்று வலப்பக்கம் இருக்கும் மூலையில்தான் படுக்கையறை. படுக்கவும்… கலைக்கவும்… பின் விரிக்கவும்! அதன் இடப்புறமும் எனது மூலைதான் ஒரு தொட்டில் பால் போத்தல்கள் பொம்மைகள் அழுக்குத்…

ஆடுகளம்

சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள் மாறியிருக்கும் நீ நினைக்கிறாயா நான் பதுமையென்று புதுமையும் பதுமையம் எம் விரல் நுனியில்தான் எந்த விரல் நீட்டுவதென்று நானே தீர்மானிக்கிறேன் நாணி ஆடவும் நாண் ஏற்றவும் கூட என் சுட்டுவிரல் போதும். சுடுகுழல் தூக்குதற்கும் கூட செக்குமாடாய் பின் முற்றத்தில் போட்ட வட்டங்கள் எல்லாம்…

என் மகனின் காதலிக்கு!

கதவுகள் கழற்றிய சுவர்கள் இவை எங்கினும் விரிந்திருக்கிறது உனது வார்த்தைகளுக்கான  பிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போல உன் உடல் காணப்போகும் சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லை பேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிது நட்சத்திரத் தூவலைப்போல முத்தம் கொட்டிய முற்றமிது ஒவ்வொரு மாலையும் அது நிகழும் இயற்கையென உயிர்ப்பசி தீர்க்கவே நாடிவருவான் பிறவேர்களில் நீர்உறிஞ்சும் செடியல்ல மகளே உன் காலச்செடிகளை தொலைவுகாணப் படரவிடு அவன் நதிகளைக் கண்டவன் மழைத்துளியின் புதல்வனவன் அருவியும் பறவையும் கடலும் சுடுமணலும் அறிவான் சிறகுகளை…

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை – பகிர்வு 12

மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது. கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை. விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல்…