இறைமீட்பு

நீ கொடுப்பாய் என்று தெரிந்தபின்னும் கேட்காமல் நான் எடுத்துக்கொண்டது காதல் ஒரு முறை அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச்சொன்னார் இயேசு அடிக்கடி நினைவில் வந்து தொலைக்கிறது அது நீ கொடுத்த முத்தத்தில் இன்பப் படுக்கையில் உன் நினைவுகளின் இறைமீட்பு. போர்த்திக் கொள்கிறது கனவு உன் விரலால் என் விரல் கவ்வி நீ கற்று தா நாம் கலைகள் பயில்வோம் நிலவினிலே மென் இதழ் முத்தமொன்றும் இதழ் உதிர்க்கும் வார்த்தைகளும் அள்ளிபோக நான் வருவேன் யாசகனாய்  இருப்பதில் ஆட்சேபனை எனக்கில்லை…

நீளமான இரவுகள்

நீளமான இரவில் இருட்டின் அடர்த்தி கிழித்து எரிந்து கொண்டிருந்தது உருகிவழிந்த மெழுகுவத்தி அழகான மழை வெளியே அற்புதமாயிருக்கிறது மண்வாசம் நிசப்தத்தின் ஆழுமையில் வெடித்து சிதறுகிறது உன்னுடனான என் முதல் நாள் நினைவுகள் ஒரு நொடியாய்க் கரைந்துபோன அந்த ஒருநாளப்பொழுது எத்தனை இரவை நீளமாக்கும் சொல் சிதறிய உன் நினைவுத்துண்டுகள் பொறுக்கி கீறிப்பார்க்கிறேன் என் உயிர்முழுதும் கசிந்துபோகும் ஏக்கத்தின் உச்சத்தில் யார் என்று நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?

ஜடாமுடியில் நெளியும் பாம்புகள்

என் வெளிமீது படரும் பொய்க்காலங்களின் கண்கள் என்னை மேவி நுழைகிறது என் ஜடாமுடியிலிருந்து பிடுங்கி எறிந்த பிறகும் இறகு முளைத்த சர்ப்பங்களென நினைவுகளில் ஊர்ந்து விடத்தின் வீரியத்தை வக்கிரமாய் கக்கியெறிகிறது ஆற்றாமல் நெளிந்து, அருவெறுத்து ஒதுங்கி நின்று தள்ளி நடந்து பாராமல்ச் சென்றும்… உன்னோடானா அன்றைய பொய்காலங்களின் தனல் பட்டு அதிர்ந்து மௌனித்தேன் ரத்தம் கண்ட வடுகளில் வலி பழைய புண்களைக் கிளறும் துர்நாற்றம் பரபி உச்சந்தலையுள் ஊடுருவும் சடலங்கள் எனக்கடந்த யுகங்கள் மீண்டும் நிகழுமென் வெளிமீதில்…

பிளவுகள்

இதோ எனது பூமி என் கால்களுக்கடியிலிருந்து நழுவுகிறது அரசியல் ஆணிகளாலும் பிளவுமனக் கடப்பாறைகளாளும் ஓங்கி அடித்தவண்ணம் ஆக்கிரமிக்கும் அடங்காத உயிரினங்கள் போல ஆறாதநடனம் புரிகின்றனர் எனது உலகு பல கூறுகளாக்கப்படுகிறது வெடிப்புகளின் நுனியிலிருந்து கோசங்கள் புறப்பட்டு புலரும் திசையெங்கும் பீங்கான் கோப்பைகள் போல சத்தமாய் உடைகிறது பூமி இவர்கள் தம்மை தேவர் என்றும் அவர்களை அசுரர் என்றும் அறிவிக்கின்றனர் அவர்கள் இவர்களை அரக்கர் எனவும் தம்மை வானவர் எனவும் அறிக்கையிடுகின்றனர் பிளவுபடும் பூமியில் மனிதன் என்ற ஒன்று…

17 may – ஒரு பொழுது!

எங்கும் சிவப்பு நிறக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன முகம் மலர்ந்த மனிதர்கள் ஈசல்களைப் போல வந்துகொண்டிருந்தார்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள்இ வாழ்த்துக்கள் சொன்னேன் இசைமுழங்கினர் கேட்டுக்கொண்டிருந்தேன் சுதந்திரம் பற்றிப் பேசினர் பார்த்துக்கொண்டிருந்தேன் சுதந்திரகீதம் முழங்கிற்று நானும் முணுமுணுத்துக்கொண்டேன் குழந்தைகள் அணிவகுத்துச் சென்றார்கள்இ அவர்கள் திரும்பும்வரை காத்துக்கொண்டிருந்தேன் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள் பலர் தமைநோக்கி அலைபேசிப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். சிறுமியர் மலர்கிரீடம் சூட்டியிருந்தனர். அழகாயிருந்தது பாண்டங்கள் கொடுத்தார்கள்இ கட்டியணைத்தார்கள் நிதிசேகரித்தார்கள்இ நின்று பேசினார்கள் தெருவெங்கும் பூக்கள் சுதந்திரமாய்ச் சிரித்தாடின. கைகட்டி அசைவற்று நாகரிகச் சிரிப்போடு…

நாளொரு கவிதை வேண்டும்

சித்தார்த்! கள்ளெனச் சொட்டும் போதையை உள்ளிழுத்து நுகர்ந்து நரம்புகளுள் ஊடுருவவிட்டு குருதியோடதைக் கலந்து உனைப்போலவே கண்மூடி என்னை நானே மறந்தோய நாளொரு கவிதை வேண்டும் அல்லதுநீ வேண்டும்

பதில் நீ தான் சொல்லவேண்டும்

என்னைப் பிடித்துபோனதாக சொல்லி என் கண்களிலும் கனவுகளைக் கொய்து போட்ட காதலனே.. முதலில் யாசிப்பதை நிறுத்து என் அடிமையென்று உளருவதை நிறுத்து எனக்கு அடிமைகளில் பிடிப்பில்லை அடிமைகளை நான் காதலிப்பதில்லை நிமிர்ந்து நில் என் வாழ்க்கைதுணையாகப் போகிறவனாய்… எனது வழியெங்கும் காதல் வினாக்களை வீசீ எறிகிறாய் என்னை நோக்கி உனது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது நானல்ல நீ தான்! நான் நடந்தால் பூவாசம் என்று சொன்னாய் அதானால் கேட்கிறேன் எனக்கு வியர்திருக்கையில் நீ பார்திருக்கிறாயா? என்…

அப்பா..

ஒளியின்றித் துளிர்க்கும் வடதுருவத்து வசந்தம் போல மேகத்திரைவிலக்கி மெலிதாய்த் தீண்டும் மழைபோல என்னை நனைத்துப்போகவரும் உன் ஞாபகத்துளிகள்! புல்லின் கீழ் மீதமிருக்கும் பனித்துளியாய் நானிருக்க… அதிகாலைக்கதிரவனாய் என்னைத் தட்டியெழுப்பும் உன் நினைவுக்கதிர்கள்! உணர்வு நீ, உருவம் நானாய்… பூமிப்பந்தின் அத்தனை சந்துகளிலும் நுழைந்துவரும் தென்றலைப்போல… என் மனதின் இரகசியப் பொந்துகளையும் தெரிந்து வைத்திருக்கிறது உன் நினைவுக்காற்று வசந்தம் துளிர்க்கும் வண்ணாத்தி சிறகடிக்கும் என் சின்னக் கிராமத்தில் சாய்ந்துவிட்ட ஆலை நீ! உன் விடுதலைக்கனவின் விம்பங்களில் வேர்படர்ந்தி விரைத்து…

குழந்தைப்போராளி

சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்

பிறக்கப்போகும் சிறுமி

உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள் நட்சத்திரங்களை சலங்கையாக்கி சிறுமி ஆடிக்கொண்டிருந்த பொழுதில் சிற்பிகள் வந்தார்கள் சிறுமியின் ஆற்றலிலும், ஆடலிலும் வனப்பிலும் அவளை தம் பெண்தெய்வங்கள் வீற்றிருந்த கோவில்களில் வாஞ்சையோடு மீண்டும் சிற்பம் வடிக்கத் தொடங்கினர் பெரும் பாறைகளின்று பெயர்த்து தன்னிலிருந்த துகள்களைத் தட்டியபடி உங்கள் உளியை என்னிடம் தருவீர்களானால்…