‘ஜீவநதி’ இதழில் பிரசுரமான நேர்க்காணல் – கோமகன்
ஜீவநதி (இலங்கை) 02 பங்குனி 2016 “கவிதையின் அழகே அது சுதந்திரமாகவும், உண்மைத் தன்மையுடனும் தன்னை வெளிப்படுத்துவதுதான்.” கவிதா லட்சுமி , கலாசாதனா (நோர்வே) புலம் பெயர்ந்த ஈழத்து அகதிகளின் இரண்டாவது பரம்பரையின் அசுரவளர்ச்சிக்கு ஓர் சிறந்த உரைகல்லாக இருப்பவர் கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கவிதா லட்சுமி மிகச்சிறிய வயதில் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டவர். தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவரும் கவிதா, கவிதை, இலக்கியம், நடனம் என்று பல்முக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டவர்.…









