காலனியம் – பெண் – யானை

(நன்றி: காக்கைச் சிறகினிலே, 04.2019, ஓவியர் மருது) . ஈழத்து இலக்கியத்தை முன்வைத்து வல்லாதிக்க சக்திகளின் நலன்சார் அணுகுமுறையின் போக்கு மீதான வரலாற்றுப் பார்வை!   காலனியத்தின் ஆதிக்க ஆட்சிப்பின்னணியைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட ஈழத்து மக்கள் இலக்கியம் வேலப்பணிக்கன் ஒப்பாரி. இவ்விலக்கியத்தின் முக்கிய கதைமாந்தர்களாக அரியாத்தையும் யானையும் விளங்குகின்றனர். இது யானை பிடிக்கும் சமூகத்தின் கதையாடல். ஈழத்தில் வன்னியில் இருந்து எழுதப்பட்ட இவ் இலக்கியமானது வன்னி மண்ணின் மக்கள் இலக்கியமாக பெண்ணின் வீரத்தைப் பறைசாற்றும் படைப்பாகவே இன்றுவரை…

வாழ்க்கை பராபட்சமானது.

  மனித மனம் சில நேரங்களில் திடீரென ஒரு நிலைமாற்றம் அடைகிறது. ஆழ்கடலில் இருந்து எழுந்த பழைய ஞாபகங்கள் முடிவிலி அலைகள் போல அடிக்கத் தொடங்குகிறது. மனிதப் பிறவிகளுக்கு அதற்கென்ன குறைவு? எத்தனை கசப்புகள்? எத்தனை இழப்புகள்? தனிமைப் பொழுதுகளுக்குத் தெரியும் எப்போது எதை எடுத்து மனத்திரையில் நிறுத்தவேண்டுமென? சட்டென நெஞ்சு பாரமடைந்துவிடும். இரத்த நாளங்களில் நினைவுத் திரள்கள் உருண்டு அடைத்துக் கொண்டு நிற்கும். அது ஒரு உறவின் மரணமாக இருக்கலாம். ஒரு நட்பின் பிரிவாகவும் இருக்கலாம்.…

Innovation: புத்தாக்கம் – படைப்பாற்றல் – கண்டுபிடிப்பு, தாண்டி வேறு பெறுமதிகளையும் கொண்டது.

  Innovation? தற்போது பல இடங்களில் பலதரப்பட்ட முறையில் பாவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அந்தச் சொல் அதற்கான சரியான அர்த்தத்தில்தான் பாவிக்கப்படுகிறதா? Innovation என்பதை புத்தாக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம். ஆயினும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினை முற்றுமுழுதாக புத்தாக்கம் என்ற சொல் தருகின்றதா என்பது கேள்விக்குரியதே. படைப்பாற்றலை ஆங்கிலத்தில் creativeness/creation என்று சொல்கிறோம். அதைத்தாண்டி Innovation என்ற சொல்லைப் பாவிக்கிறோம் என்றால் நாம் அதனை விளங்கிக்சொண்டிருப்பது அவசியமாகிறது. புத்தாக்கம், படைப்பாற்றல், கண்டுபிடிப்பு என்ற பதங்கள் Innovationனுடன் தொடர்புடையதாக இருந்தாலும்…

சந்திரகிரிக் கோட்டை

  சந்திரகிரிக் கோட்டை கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் நாராயணவனத்தைத் தலைநகராகக் கொண்டு சந்திரகிரி மண்டலப் பகுதியை மண்டலாதிபதியாக இருந்து ஆண்டு வந்த இம்மடி நரசிம்ம யாதவ ராயர் என்ற குறுநிலத் தலைவனால் கட்டப்பட்டது. திருப்பதி – ஊத்துக்கோட்டை – சென்னை வழியில் இந்த நாராயணவனம் உள்ளது சந்திரகிரி ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அழகான கிராமம். ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலத்தில் அமைந்துள்ள சந்திரகிரி கி.பி 1367 ஆம் ஆண்டு முதல்…

அத்திரம்பாக்கம்

அத்திரம்பாக்கம் என்ற இடம் பார்ப்பதற்கு ஒரு சாதாரணக் கிராமம் போலதான். இது சென்னை 60 கீலோமீட்டர் தூரத்தில், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையில் இருக்கிறது. இது தொல்பழங்கால மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் (குவார்சைட் கற்கள்) பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான (5 -10 லட்சம் வருடம்) ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இவ்வினம் வாழ்ந்ததற்குரிய சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. தமிழகத்தில் அல்லது இந்தியாவில் என்று இல்லாது, உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள…

பட்டதகல் – கர்நாடகா

வாதாபியில் இருந்து ஏறத்தாழ இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பட்டடக்கல் கோவிற் தொகுதிகள். இங்கு அமைந்துள்ள கோவில்கள் ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்தியாவில் காணப்படும் மூன்று விதமான கட்டிடக் கலை அமைப்பை இங்கு காணலாம். இந்தியாவின் கட்டிடக் கலைப் பாணிகளான திராவிடம் , வேசரம் மற்றும் நாகரப் பாணிகளை எழுப்பிய இடமாக பட்டடக்கல் விளங்குகின்றது. கோவிற் கட்டிடக் கலையில் பலவித நுணுக்கமான வேலைப்பாடுகளையும் , புதுமைகளையும் செய்து கற்றாராயும் ஒரு கலைப் பள்ளியின் ஆக்கங்களாக…

பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

ஈழத்துப் பெண் ஜெயமோகனுக்கு எழுதிக்கொள்வது. பெண்கள் தொடர்பாக அடிப்படை அறமே உம்மிடம் இல்லையே ? எழுத்தாளர் பட்டியலில் எப்படி உம்மை இருத்தி வைத்தார்கள்? கவிதைகளால் பெண்களின் கற்பழிந்து போகும் என்றால் என்ன? எப்படி யோசித்தும் புரியவேயில்லை? உமது பார்வையில் பெண்களிடத்தில் கற்பு கடைசியாக எங்கே இருக்கிறது? எம் மண்ணின் கவிதைகள் அல்லது கவிஞர்கள் எந்த விதத்தில் பெண்களின் கற்பை அழித்துவிடுவார்கள் என்ற கவலை உமக்கு? விளக்கமாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமல்லவா? உம் போன்றவர்களை இன்னும் எழுத்தாளர்கள்…

‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா.

பிரேம்ராஜ் நெறியாள்கையில், நோர்வே துரொண்ஹைம் தமிழ் அரங்கம் (Trondheim Tamil Theatre) கலைஞர்களின் ‘என்னோற்றான் கொல்’ —————————————————–     ‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா. புலம்பெயர் தமிழர்களின் முதற் சுற்று முடிந்துவிட்டது. எமது இரண்டாம் தலைமுறையின் சுற்று ஆரம்பித்திருக்கிறது. என்னோற்றான் கொல் இவர்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. என்னோற்றான் கொல் எமது கதை. புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலை. எம்மைச் சுற்றி இருக்கும் மனித மனத்தின் உளவியலைப் பேசும் திரைக்கதை. கதையின்…

Ravi Varma – Indisk Malerkunstner

Raja Ravi Varma Koil Thampuran (29 april 1848 – 2 oktober 1906)   Ravi Varma er en av viktigste malerne i indisk kunst historien. Hans verk er blant de beste eksemplene på sammensmeltingen av europeiske teknikker med et rent indisk følsomhet. For det andre, var han kjent for å lage litografier. Han gjorde malerier tilgjengelig for…

விஜயநகரப் பேரரசு – 2 – சுலே பஜார்/ சூலை பஜார் ( Harlots Market)

ஹம்பியில் நான் பார்க்க விரும்பிப் போன இடம் சுலே பஜார்/ சூலை பஜார். ஹம்பியில் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தேவரடியார்கள் வாழ்ந்த இடம் இது. தேவரடியார்கள் பின்னைய காலங்களில் தேவதாசிகள் எனவும், தாசிகள் எனவும் அழைக்கப்பட்டது வேறு கதை. இந்தியச் சுதந்திரப் போராட்டகாலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது தேவதாசி தொடர்பாக சமூகம் கொண்டிருந்த பார்வைக்கும் அதற்கு முந்தயை காலங்களில் தேவரடியார் மீது சமூகம் வைத்திருந்த பார்வைக்கும் வேறுபாடுகள் இருந்தன. கோவில்கள் நிறுவனமயமாக்கப்பட்ட காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும்…