இப்படியாகப்பட்டவள் நான்
பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…









