Innovation

Innovation: புத்தாக்கம் – படைப்பாற்றல் – கண்டுபிடிப்பு, தாண்டி வேறு பெறுமதிகளையும் கொண்டது. Innovation? தற்போது பல இடங்களில் பலதரப்பட்ட முறையில் பாவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அந்தச் சொல் அதற்கான சரியான அர்த்தத்தில்தான் பாவிக்கப்படுகிறதா? Innovation என்பதை புத்தாக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம். ஆயினும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினை முற்றுமுழுதாக புத்தாக்கம் என்ற சொல் தருகின்றதா என்பது கேள்விக்குரியதே. படைப்பாற்றலை ஆங்கிலத்தில் creativeness/creation என்று சொல்கிறோம். அதைத்தாண்டி Innovation என்ற சொல்லைப் பாவிக்கிறோம் என்றால் நாம் அதனை விளங்கிக்சொண்டிருப்பது…

வீடு

இப்போதெல்லாம் வீடுகள் மிகவும் வெறுமையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு, புதிது புதிதாய் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெள்ளை நிறச் சுவர்களையே அதிகமாக் கொண்டிருக்கின்றன. பொருட்களைக் குறைத்து வெள்ளை நிறச் சுவர்களை வெறுமனே விட்டு வைப்பதே நாகரிகம் என்று ஆகிவிட்டது. இருக்கையும் முன் மேசையும் அதில் ஒரு மெழுகு திரிக் குவளையும் முகட்டின் உள்ளே பொருத்தப்பட்ட விளக்கும் போதுமானதாக இருக்கிறது. இருக்கையின் பின்புறமோ, தூரமாகவோ ஒரு கலைத்துவமிக்க படம் வெகு கவனத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது. அது கலைத்துவம் மிக்கது என்பதைவிட…

அடைமழைப் பொழுதுகள்

அடைமழைப் பொழுதுகளில் எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது. சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது. மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்! இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது. அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது. நீ அறியாததா என்ன! மழைநாஎத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட! இப்போது பார்…

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் ’நட்பு’

என் தினசரித் தாகங்களைத் தீர்க்கும் மாபெரும் ஊற்று எனக்கு நட்பு! ஓடையாகி கரைபுரண்டோடும் நதியாகி அருவியாய் அவை கண்களிலும் விழுந்தோடுவதுண்டு. எத்தனை எத்தனை தோழமைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். வாழ்வில் ஒவ்வொன்றும் ஒரு அங்கம். சில நட்புகள் கை குலுக்கல்களோடு நின்று போய்விடுவதுண்டு. வாழ்வின் தூரங்களை எம்மோடு கடந்த சினேகங்களின் முகங்களைக்கூட பார்க்கவிரும்பாத தருணங்களையும் கடந்து வந்ததுண்டு. நட்பென்பது நமது கதையை முழுதாய் ஒப்புக்கொடுப்பது. நமது இரகசியங்களைப் போட்டு வைக்கும் டிரங்குப்பெட்டிகள் போன்றவை. நம்பிக்கை மட்டுமே இதன்…

வீடு

இப்போதெல்லாம் வீடுகள் மிகவும் வெறுமையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு, புதிது புதிதாய் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெள்ளை நிறச் சுவர்களையே அதிகமாக் கொண்டிருக்கின்றன. பொருட்களைக் குறைத்து வெள்ளை நிறச் சுவர்களை வெறுமனே விட்டு வைப்பதே நாகரிகம் என்று ஆகிவிட்டது. இருக்கையும் முன் மேசையும் அதில் ஒரு மெழுகு திரிக் குவளையும் முகட்டின் உள்ளே பொருத்தப்பட்ட விளக்கும் போதுமானதாக இருக்கிறது. இருக்கையின் பின்புறமோ, தூரமாகவோ ஒரு கலைத்துவமிக்க படம் வெகு கவனத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது. அது கலைத்துவம் மிக்கது என்பதைவிட…

காலனியம் – பெண் – யானை

(நன்றி: காக்கைச் சிறகினிலே, 04.2019, ஓவியர் மருது) . ஈழத்து இலக்கியத்தை முன்வைத்து வல்லாதிக்க சக்திகளின் நலன்சார் அணுகுமுறையின் போக்கு மீதான வரலாற்றுப் பார்வை!   காலனியத்தின் ஆதிக்க ஆட்சிப்பின்னணியைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட ஈழத்து மக்கள் இலக்கியம் வேலப்பணிக்கன் ஒப்பாரி. இவ்விலக்கியத்தின் முக்கிய கதைமாந்தர்களாக அரியாத்தையும் யானையும் விளங்குகின்றனர். இது யானை பிடிக்கும் சமூகத்தின் கதையாடல். ஈழத்தில் வன்னியில் இருந்து எழுதப்பட்ட இவ் இலக்கியமானது வன்னி மண்ணின் மக்கள் இலக்கியமாக பெண்ணின் வீரத்தைப் பறைசாற்றும் படைப்பாகவே இன்றுவரை…

வாழ்க்கை பராபட்சமானது.

  மனித மனம் சில நேரங்களில் திடீரென ஒரு நிலைமாற்றம் அடைகிறது. ஆழ்கடலில் இருந்து எழுந்த பழைய ஞாபகங்கள் முடிவிலி அலைகள் போல அடிக்கத் தொடங்குகிறது. மனிதப் பிறவிகளுக்கு அதற்கென்ன குறைவு? எத்தனை கசப்புகள்? எத்தனை இழப்புகள்? தனிமைப் பொழுதுகளுக்குத் தெரியும் எப்போது எதை எடுத்து மனத்திரையில் நிறுத்தவேண்டுமென? சட்டென நெஞ்சு பாரமடைந்துவிடும். இரத்த நாளங்களில் நினைவுத் திரள்கள் உருண்டு அடைத்துக் கொண்டு நிற்கும். அது ஒரு உறவின் மரணமாக இருக்கலாம். ஒரு நட்பின் பிரிவாகவும் இருக்கலாம்.…

Innovation: புத்தாக்கம் – படைப்பாற்றல் – கண்டுபிடிப்பு, தாண்டி வேறு பெறுமதிகளையும் கொண்டது.

  Innovation? தற்போது பல இடங்களில் பலதரப்பட்ட முறையில் பாவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அந்தச் சொல் அதற்கான சரியான அர்த்தத்தில்தான் பாவிக்கப்படுகிறதா? Innovation என்பதை புத்தாக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம். ஆயினும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினை முற்றுமுழுதாக புத்தாக்கம் என்ற சொல் தருகின்றதா என்பது கேள்விக்குரியதே. படைப்பாற்றலை ஆங்கிலத்தில் creativeness/creation என்று சொல்கிறோம். அதைத்தாண்டி Innovation என்ற சொல்லைப் பாவிக்கிறோம் என்றால் நாம் அதனை விளங்கிக்சொண்டிருப்பது அவசியமாகிறது. புத்தாக்கம், படைப்பாற்றல், கண்டுபிடிப்பு என்ற பதங்கள் Innovationனுடன் தொடர்புடையதாக இருந்தாலும்…

பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

ஈழத்துப் பெண் ஜெயமோகனுக்கு எழுதிக்கொள்வது. பெண்கள் தொடர்பாக அடிப்படை அறமே உம்மிடம் இல்லையே ? எழுத்தாளர் பட்டியலில் எப்படி உம்மை இருத்தி வைத்தார்கள்? கவிதைகளால் பெண்களின் கற்பழிந்து போகும் என்றால் என்ன? எப்படி யோசித்தும் புரியவேயில்லை? உமது பார்வையில் பெண்களிடத்தில் கற்பு கடைசியாக எங்கே இருக்கிறது? எம் மண்ணின் கவிதைகள் அல்லது கவிஞர்கள் எந்த விதத்தில் பெண்களின் கற்பை அழித்துவிடுவார்கள் என்ற கவலை உமக்கு? விளக்கமாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமல்லவா? உம் போன்றவர்களை இன்னும் எழுத்தாளர்கள்…

‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா.

பிரேம்ராஜ் நெறியாள்கையில், நோர்வே துரொண்ஹைம் தமிழ் அரங்கம் (Trondheim Tamil Theatre) கலைஞர்களின் ‘என்னோற்றான் கொல்’ —————————————————–     ‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா. புலம்பெயர் தமிழர்களின் முதற் சுற்று முடிந்துவிட்டது. எமது இரண்டாம் தலைமுறையின் சுற்று ஆரம்பித்திருக்கிறது. என்னோற்றான் கொல் இவர்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. என்னோற்றான் கொல் எமது கதை. புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலை. எம்மைச் சுற்றி இருக்கும் மனித மனத்தின் உளவியலைப் பேசும் திரைக்கதை. கதையின்…