இப்படியாகப்பட்டவள் நான்

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…

தனிமை உடைக்கவே விரும்புகிறேன்

நேற்று வானம் உடைந்து தண்ணீரில் கிடந்தது என்றால், நம்பமுடிகிறதா? அதன் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக்காட்சி ஒருவித மாயை. மாயையை முழுமையாய் உணர சில நொடி தனிமை தேவைப்படுகிறது. அது, அந்தத் தனிமை அந்தக்கணம்தான். பிறகு தனிமையை உடைத்தெறியவே மனம் விரும்புகிறது. உணர்வுகளை எல்லாம் அறிவிடம் அடிபணிய வைத்துவிடும் இந்தத் தனிமையை, அதற்காகவேனும் உடைத்துப்போட வேண்டும். தனிமையில் மனம் தான்தோன்றித்தனமாய் கட்டுடைத்துச் செல்வது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. கட்டுடைப்புகள் அசௌகரியமானவை. அதனால்தான் அசௌகரியங்கள் எல்லாம்…

எமது சிந்தனைச் சேமிப்புகளின் உலகப்பெரும் வங்கி.

நோர்வேஜிய மொழி: Jan Vincents Johannessen  தமிழ்: கவிதா (நோர்வே)   கலைஞராக கடல்வணிகராக விவசாயியாக அல்லது விஞ்ஞானியாக, நாம் யாராக இருந்தாலும், யாரோ ஒருவரின் பிரதிபலிப்பாகவே நாம் இருக்கின்றோம். யாரினுடைய பிம்பமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்பது மட்டுமே எம்மால் தீர்மாணிக்கப்படுகின்றது. நாம் ஒரு குழுவில் எம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதென்பது எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நாமும்  சரி அக்குழுத் தலைமைகளும் சரி குழுவின் முக்கிய கொள்கைகளை மீறாதிருப்பது கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடுகிறது. நாம் இணைந்துகொண்ட குழுவின்…

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?

மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும்,…

விமர்சனம், விமர்சகன்.

ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான சூழலில்தான் எழமுடியும். ஒரு கலைஞனோ ஒரு அமைப்போ தனது படைப்பின் அல்லது தனது குழுவின் மீது தெளிவான நம்பிக்கை கொண்டுள்ள இடத்திற்தான் அதற்கமைய ஆரோக்கியமான விமர்சகங்களுக்கான சூழல் அமைகின்றது. தனது படைப்பில் தெளிவான கருத்துடைய ஒரு படைப்பாளியால் தன் தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ அல்லது செவிமடுத்துகொள்வதிலோ தான் தாழவில்லை இதனால் முடிந்தவரை நான் உயர்வதற்கான வழிகளையே உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்ற மனநிலையில் இருந்து ஒரு விமர்சனத்தைப் பார்க்க முடியும். ஒரு விமர்சனத்தை…

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு

  “சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.” கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான்…