ஒளியின்றித் துளிர்க்கும் வடதுருவத்து வசந்தம் போல மேகத்திரைவிலக்கி மெலிதாய்த் தீண்டும் மழைபோல என்னை நனைத்துப்போகவரும் உன் ஞாபகத்துளிகள்! புல்லின் கீழ் மீதமிருக்கும் பனித்துளியாய் நானிருக்க… அதிகாலைக்கதிரவனாய் என்னைத் தட்டியெழுப்பும் உன் நினைவுக்கதிர்கள்! உணர்வு நீ, உருவம் நானாய்… பூமிப்பந்தின் அத்தனை சந்துகளிலும் நுழைந்துவரும் தென்றலைப்போல… என் மனதின் இரகசியப் பொந்துகளையும் தெரிந்து வைத்திருக்கிறது உன் நினைவுக்காற்று வசந்தம் துளிர்க்கும் வண்ணாத்தி சிறகடிக்கும் என் சின்னக் கிராமத்தில் சாய்ந்துவிட்ட ஆலை நீ! உன் விடுதலைக்கனவின் விம்பங்களில் வேர்படர்ந்தி விரைத்து…