அடைமழைப் பொழுதுகள்
அடைமழைப் பொழுதுகளில் எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது. சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது. மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்! இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது. அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது. நீ அறியாததா என்ன! மழைநாஎத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட! இப்போது பார்…









