பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’

பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’ பாரதியின் பாடல்களை அசைவுகளால் காட்சிப்படுத்தும் முயற்சியில் இந்தப் பாடல் நடனமமைக்கப்பட வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. இது முன்னோட்டம்.விரைவில் நோர்வேயின் கிழக்கு மலைக்குன்றுகளில் காட்சிப்படுத்தப்பட்டு முழுப் பாடற்காணொளி வெளிவரவுள்ளது. அஸ்வமித்ரா இசையில், கிரனின் குரலில், கணேஸின் சொற்கட்டுக்களோடு உயிர்பெறக் காத்திருக்கிறது.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு கலாசாதனா கலைக்கூடம்

எகிப்து

எகிப்துபயணங்களும் பதிவுகளும் பயணத்தின் அனுபவங்களையும், அதிர்வுகளையும் சேகரித்து வைப்பதே இதுவரை எனது வைப்பில் இருக்கும் மிகப்பெரும் சொத்துக்கள். முதன் முதலாக எகிப்து பற்றி அறிமுகமாகும் போது எனக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தந்த வரலாற்றுப் பாடத்தில் தான் எகிப்து பற்றியும் உலகின் தொன்மையான சமூகம் ஒன்று வாழ்ந்து பயிர்த்தொழில் செய்யத் தொடங்கிய இடத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அப்போதே அந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 2018- இல் எகிப்துக்குச் செல்லும்…

நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் -Bokhandelens hus

Bokhandelens hus நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் (bokhandelens hus) 1851 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்று. நோர்வே நாட்டில் வெளியிடப்படும் நூல்களை மேம்படுத்துவதும், ஆவணப்படுத்திப் பாதுகாப்பதும், நோர்வேஜிய மொழியின் இலக்கியத் தரத்தை, சமூகத்தில் புத்தகங்களுக்கான இடத்தை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கின்றது. எழுத்தாளர்களும் அவர்கள் தொடர்பான ஆவணங்களும் காணக்கிடைக்கின்றன. முக்கியமான அனைத்து பதிப்பகங்களும், புத்தகக்கடைகளும் இந்நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கின்றனர்.புத்தகங்கள் தொடர்பான, கடைகள், வெளியீட்டாளர்கள், புத்தகம் தொடர்பான வர்த்தக கல்வியில் நாட்டமுள்ளோர், அனைவருக்குமான தொழில்முறைக்கல்வியும் இங்கே ஒரு…

‘The Great Indian Kitchen’

ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது என்பது, எனக்கு நானே எழுதிக்கொள்வது போன்றது. திரைக்காட்சிகள் தரும் மெய்யுணர்வை எழுத்துக்களால் நிரப்பிவிட முடியாது. சில படங்களைப் பார்க்கும்போது அதைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டும் போல தோன்றும். பேசிய பின்னும் மனதில் ஏதோ ஒன்று படிந்துபோய் இருந்தால் எழுதத் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் பேனா மிகப்பெரும் சுமைதாங்கி. இந்தப்படத்தின் கதையொன்றும் புதிய கருப்பொருளைப் பேசவில்லை. பலகாலமாக கவிதைகளும் சிறுகதைகளும் கையாண்டுவரும் பேசுபொருள்தான். ”மூலைகள்” என்ற எனது கவிதையும் இதே பேசுபொருள்தான்.…

போரைப் பேசுதல்

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே அழிவதை நின்று பாரக்கும் ஒரு பெண்ணை நீங்கள் சந்தித்ததுண்டா? ஒஸ்லோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஓவியக்கண்காட்சி. ”ரோஜாஅரண்மனை” என்பது ஒரு ஓவியக் கண்காட்சி. இரண்டாம் உலகயுத்ததின் போது நோர்வே சந்தித்த பேரழிவுகளின், ஆக்கிரரமிப்பின் சாட்சியாக…

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

எத்தனை எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்திருக்கின்றனர். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை , பாரதியின் கவி வரிகளை மேவியோ கடந்தோ ஒற்றைச் சொல்லைக் கூட இதுவரை இலகு தமிழில் யாரும் எழுதிவிட இல்லை என்றே தோன்றுகிறது. துமிக்கும் மழையின் முதற் துளி போல அத்தனை இளமையோடு இருக்கின்றன அவன் எழுதிய வரிகள். அவனது ஒற்றைச் சொற்களுக்குக்கூட அத்தனை வலிமையுண்டு. ஆண்டு பலவாய் அவன் கவிதைகளைப் படித்து வந்தபோதும் அவன் யாத்த சொற்களும் வரிகளும் இன்றும் நம் உணர்வுகளைப் புத்தம்…

Trolltunga – நெடுமலைப்பயணம் – நோர்வே

இயற்கையை அனுபவிக்க நோர்வே ஒரு மிகச் சிறந்த நாடு. மலைத் தொடர்கள் அதனோடு சேர்ந்த உட்கடல்கள் என இயற்கையின் பிரம்மாண்டங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. நள்ளிரவுச் சூரியன் (Midnight sun) வடதுருவ ஒளி (Northen lights) போன்ற இயற்கையின் அற்புதங்களையும் அதிசய நிகழ்வுகளையும் இங்கு கண்டுகளிக்கலாம். வார இறுதியில் மலைகளுக்குச் செல்வதும், மலைவீடுகளிற் (மலைக் குடில்களில்) தங்கி வருவதும் நோர்வே மக்களுக்களின் வழக்கங்களில் ஒன்று. நானும் அவ்வப்போது நண்பர்களோடு சென்று வருவது உண்டு. சமீபத்தில் இங்குள்ள துறொல்துங்கா (Trolltunga)…

ஹம்சகீதே – ஒரு இசைக்கலைஞனின் கதை

ஹம்சகீதே பொதுவாக நாவல்கள் திரைக்கதையாக மாறும் போது படைப்பு முழுமையடைவில்லை என்றே தோன்றும். மோகமுள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் அதற்குச் சாட்சி சொல்லும். ஹம்சகீதே என்ற நாவலைத் திரைப்படமாக்கியவர் இயக்கியவர் ஜி.வி.ஐயர். நல்லவேளையாக நான் ஹம்சகீதே நாவலைப் படிக்கவில்லை. நாவலைப் படிக்காமல் திரைப்படத்தைப் பார்த்த வகையில் முழுமையான படைப்பென்றே சொல்லவேண்டும். ஹம்சகீதேவை எனக்குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு. ஹம்சகீதே அகம் சார்ந்த கதை. இசை, நடனம், வரலாறு என்ற கூறுகளை…

ஞானரதம்

ஞானரதம் பாரதி கவிதைகளைப் போலவேதான் பாரதியின் உரைநடைகள், கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் ஞானத்தேட்டத்திற்கானவை. ஆனாலும் பாரதி கவிதைகளைப் போல அவை வாசிப்புப் பெருவெளியை இன்னும் சென்றடையவில்லை என்பது என் எண்ணம். ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை. குறுநாவல். தத்துவ விசாரணை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அவ்வப்போது கற்பனையிற் கண்ட புதிய உலகொன்றில் சஞ்சாரம் செய்வதுண்டு. அப்படியான ஒரு சஞ்சாரப் பொழுதில் பாரதி பற்பல உலகங்களில் பறந்து திரிந்து யாத்த கற்பனைச் சித்திரந்தான் ஞானரதம். வாழ்வின் உன்னத கணமொன்றைத்…

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு – பகுதி 1

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு. பிண்டி – பிணையல் – எழிற்கை – தொழிற்கை – பொருட்கை போன்ற தமிழ்வழிச் நாட்டியச் சொற்களுக்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.