உனக்கான எனது இரண்டாவது கவிதை

                      மகனே! ஒரு வைத்தியனைப்போல வக்கீலைப்போல விவசாயியைப்போல நீ தொழிலாளியாகலாம் அல்லது விளையாட்டு வீரனாகவோ முதலாளியாகவோ கலைஞனாகவோ எழுத்தாளனாகவோ ஒரு தேசாந்திரி போல இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோ நீ உருவாகக்கூடும் எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாக அகிம்சைவாதியாக சோசலிசவாதியாக கடும்போக்காளனாக ஜனநாயகவாதியாக சமூகப்போராளியாக அல்லது இவையற்ற வேற்றொரு கொள்கையைக் கொண்டிருக்கலாம் உனது தேர்வுகளில் தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய் கிருஸ்தவனாய் இஸ்லாமியனாய் பௌத்தனாய் அல்லது கடவுள்…

உனக்கு நான் எழுதிய முதற்கவிதை

  முதல்முறை எமது பிரிவு நிகழ்ந்தபோது கருவறையிலிருந்து நீ பிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீ புறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்ட அந்த இரவின் தீப்பொறி போல் பிரிவு நிகழ்தலின் மனச்சலனம் தாக்கிய வடுக்கள் முதல்முறை என்னுள் நுழைந்தது கண்ணே! என் விரலினூடு நடந்த நீ கைகளை உதறிக்கொண்டு உலகை தனியாக அளக்கத் தொடங்கிய அதிர்வும் துளிர்க்கும் கண்களோடு விடைபெறும் நீ… அன்று திரும்பிப்பாராமல் ஓடிய நிமிடம் என்மீது எறியப்பட்ட திகைப்பும் கண்ணாடிச் சாரளத்தனூடு தொடரும் உன் கையசைவுகள்…