பரிஸில் எம்மைக் கவர்ந்தவர்களிற் சிலர்- 6
சிருஸ்டித் திறன் மிகுந்த நர்த்தகி – கவிதா லக்ஷ்மி பரீஸில் இம்முறை நான் சந்தித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கவிதா லக்ஷ்மி. ஆற்றலும்,திறனும்,அறிவும்,தேடல் எண்ணமும் கவிதை புனையும் ஆற்றலும் மிக்க ஒரு பெண் பண்டைய காலத்தில் நமது தமிழ் நட்டிய மகளிர் பல்திறன் மிக்கோராயிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு அத்தகைய பல் திறன்கள் பெற்ற ஒரு நர்த்தகியைக் கண்டது பெரு மகிழ்ச்சி தந்தது நோர்வே நாட்டிலிருந்து அவர் தம் கலைக் குழுவுடன் பொங்கல் விழாவுக்கு நிகழ்ச்சிகள் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார். கலாசாதனா…









