கொஞ்சம் தேனீர்!
எனக்குத் தெரிந்த உலகின் மிக ரம்யமானதொரு கலைப்பொருள் என்றால் அது தேனீர்க்குவளைதான். ஒன்றுபோல் டசின் கணக்காக வாங்கி வைத்திருக்கும் தேனீர்க் குவளைகளைவிட அப்பப்போ தனித்தனியாக அழகியல் வேலைப்பாடுகளுடன் குவளைகளை வாங்கிச்சேர்ப்பதில் தனி ஆர்வம் உண்டெனக்கு. இப்போதும் தேனீர்குவளையில் இருந்து கிளம்பி காற்றோடு கலந்துவிடும் ஆவியின் அழகினைப் பார்த்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். குவளையின் விளிம்பில் இருந்து அதன் வாசம் போதையெனக் கிளம்புகிறது. விரல்களைச் சூடேற்றியபடி இந்தப் பனிக்காலத்தை பருகியிருத்தல் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பிறர் தரும் தேனீர்த் தருணங்களில்…









