வனச்சிறுக்கி
அந்தக் காட்டினில் ஒரு வனச்சிறுக்கியைப் போல பெயர் அறியாததொரு பூவைத் தேடி புறப்படவும் சூனியக்காரியைப் போல பறக்கும் கட்டையின் மேலேறி வானளாவக் கிளம்பும் பெருவிருப்பிலும் மந்தையில் இருந்து கழன்றதொரு ஆட்டுக்குட்டியைப்போல காலத்தைத் தாண்டியோடும் கனவுகளைச் சமைக்கிறது மனம். நளினமுமற்று நாணமுமற்று மதயானையின் வேகம் உச்சந்தலையில் சுர்ரென ஏற முள்வேலியைப் பிய்தெறியும்; ஒரு வேட்டை மிருகத்தைப்போலது சிலிர்ந்து கிளம்புகிறது. ஆட்டுக்குட்டிகள் சிலிர்கலாகாது சிலிர்தாலும் சீறலாகாது இது வேதாளத்தின் அறிகுறியென வனச்சிறுமிக்கு யார்யாரோ சொல்லிப் போகிறார்கள். தலைகீழாய் தொங்குவதே புனிதமோ…









