நிறமற்றுப் போன கனவுகளோடு நோர்வே நாட்டில் ஒரு ஈழத்துக் கவிஞன்

கத்தரிக்கப்பட்ட சொற்களுக்கும் காத்திரமான வரிகளுக்கும் சொந்தக்காரன். கவிஞர் இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்   உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. தோழில்நுட்பம் அறிவியல் என்று பல மைல்கல்லைத் தாண்டி வேகமாக பயணிக்கும் இன்றைய யதார்த்த உலகிலும், நெருக்கடி மிகுந்த இந்தத் தருணங்ளிலும் இயற்கை, சூழல், சமூகம் குறித்த குறிப்புகளோடு கவிஞர்கள் தமது அக்கறையையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர். நம் கண்முன் கரைந்து காணமல் போகும் கணப்பொழுதுகளைக் காப்பாற்றி மீண்டும் எம்முன்…

முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம் – Norway

முகநூலில் நான் அவசரமாகக் கடந்து செல்லும் சில ஒளிப்பதிவுகள் இருக்கின்றன. அவைகளில் முதன்மையாக இருப்பது முதுமையில் சில மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திய பதிவுகள்தாம்.  அசையக்கூட முடியாத மூதாட்டிகளை அடிப்பதும், உதைப்பதும், பலங்கொண்ட மட்டும் இழுத்துவீசுவதும் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்தும் வலியாலும், செயலற்ற எனது நிலையாலும், அவசரமாகத் தாண்டிச் செல்ல முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிந்ததில்லை.கொடுமைகளை அனுபவிக்கும் முதியவர்களுக்கு முதுமையில் வரும் மறதி என்பது ஒரு வரமாகவும் இருக்கக் கூடும். மறதி என்பது எந்த…

ஆடற்கலையும் ஆத்ம தேடலும்

பிரபஞ்சம் யாவுமே கூத்தென்றால் உலகின் யாவையும் நடம் செய்வோம்!  ஆடற்கலையும் ஆத்ம தேடலும் —————————- பெண்களுடன் மாயக்கண்ணன் செய்யும் சில்மிஷங்களையும், சிருங்கார லீலைகளையும் பெருமையோடு ஏற்றுக் கொள்ளும் சமூகம், சூர்ப்பனகைகளின் மூக்குகளை மட்டும் அறுத்து அனுப்பிக் கொண்டே இருப்பதைப்பற்றி நாம் சிந்தித்ததுண்டா? நாட்டியக்கலை உடல் அசைவுகளாலான தொன்மை வாய்ந்ததொரு மொழி வடிவம். நாட்டிய மொழியினூடு முன்னெடுக்கப்படும் கலை வடிவமும் அதன் பேசுபொருளும் இரண்டு வேறுபட்ட விடயங்கள். கலை வடிவம் என்பது கட்டுமானம். பேசு பொருள் என்பது மனித…

தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் : கவிதா லட்சுமியின் சிகண்டி – அ. ராமசாமி

  கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன்வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள்,உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான்   கவிதை   எழுத்துக்கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல.   இலக்கியப்பிரதி…

Preikestolen – Stavanger, Norway

  சென்றவருடம் இலையுதிர்காலம், Preikestolen (Preacher’s Chair- Stavanger) என்னும் இடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நடனம் இது. நேரமின்மை காரணமாக கிடப்பில் இருந்து தற்போது தொகுக்கப்பட்டுள்ளது. Preikestolen பாறைக்கு ஏறிச் செல்வதே ஒரு பேரனுபவம். குறைந்த பட்சம் இரண்டு மணிநேரங்கள் ஏறவேண்டும். ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் மனிதர்கள் இங்கே சுற்றுலா வருகின்றனர். காலை ஒன்பது பத்து மணியளவில் இவ்விடத்தில் மனிதர் கூடிவிடுவர் என்பதால் விடிகாலை ஐந்தரை மணியளவில் கிளம்பி எட்டு மணியளவில் மேலே சென்றடைந்தோம்.…

ஊழிக்கூத்து – உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று பாரதியின் பல படைப்புகள் அவனின் கவித்திறனை பறைசாற்றிய போதும், தனிப் பாடலாக உச்சத்தைத் தொட்ட கவிதைகளுள் அவனின் ஊழிக்கூத்து சிகரமாக நிற்கின்றது. ஆழ்ந்த பொருளுள்ள பாரதியின் கவிதைகளில் ‘ஊழிக்கூத்து’ மிகவும் தனித்துவமிக்கது. தெய்வப் பாடல்கள் என்ற பகுப்பில் இக்கவிதையைச் சேர்த்திருப்பது எத்தனை தூரம் பொருந்தும் என்பதை இக்கவிதையை படித்துணர்ந்தவர்களின் முடிவிற்கே விட்டு விடுதல் நன்று. இப்பாடலின் உட்பொருளாகி ஆடும் அன்னை பிரபஞ்ச சக்திகளின் மூலம். மூலசக்தி! அவள்…

Kunstner Ravi Varma

Raja Ravi Varma Koil Thampuran (29 april 1848 – 2 oktober 1906)   Kort livshistorie Raja Ravi Varma Koil Thampuran (født 29 april 1848) ble født på Kilimanoor palass i Travancore, sør India og var tilknyttet til kongefamilien.   Ravi Varma hadde tre søsken, en søster og to brødre. Minste av brødrene var også en maler…

ஒரேயொரு கையேடுதான் எம்மிடம் இருக்கிறது. அது சலிப்பூட்டுகிறது.

நமது சமூகத்தில் ஒரு நபரை இழிவுபடுத்த வேண்டும், காயப்படுத்த வேண்டும், ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் ஒரே கையேடு தான் பாவிக்கப்படுகிறது. அதிலும் இரண்டே இரண்டு விடயங்கள் தான் கையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சாதாரணக் குடிமகன்களில் இருந்து பெரியார் வரை இந்த ஒரு விடயம்தான். ஆணாக இருந்தால், பெண்கள் விடயத்தில் ஆள் சரியில்லை என்று காட்ட முயல்வது. பெண்ணாக இருந்தால் ஆண்கள் விடயத்தில் சரியில்லை என்று காட்ட முயல்வது. அல்லது ஏதும் பணம் தொடர்பாக கொள்ளையடித்தார்கள்,…

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம்

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம் (தொல்காப்பியம் – பொருளதிகாரம் – களவியல்) களவு என்பதின் வினை அடி கள்ளுதல். கள்ளுதல் – கவருதல். ஒருவருடைய உயிரை இன்னொருவர் கவருதல். (களவாடுதல், களவு செய்தல் எனும் பொருள்படும்.) இரண்டு அகங்கள் சேருகின்ற அகச் சேர்க்கையின் மனம் புணர் உணர்வே களவியல். ”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங்காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.…