மனுஸ்ய புத்திரன்- அதீதத்தின் ருசி” மனநிலத்தில் உள்ள எம் வெற்றிடங்களை நிரப்பத்தூண்டும் நடனமாகிறது. “பகிர்வு 13”
பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், எமது சந்தோசங்களுக்காக எதை எதையோ செய்தோம், சாதித்தோம், இறந்தோம் என வாழும் மனித வாழ்க்கையில் ஒரு சிலரே ஒவ்வொரு கணத்தையும் கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கவிதை என்றவுடன் அது ஒரு காதலையோ, மகிழ்ச்சியையோ, இன்பத்தையோ நினைவுபடுத்தும் ஒரு மாயச்சொல்லாக எம்முன் விரிகிறது. ஆனாலும் இக்கவிதை மொழி என்பது வாழ்க்கையின் இன்பக்கிளர்ச்சிகளைப் பேசிய காலங்களில் இருந்து கழன்று இன்று வாழ்க்கைக்கான கேள்விகளுடன் தனது தேடலைத் தொடங்கியிருக்கிறது. முக்கியமாக இன்றைய கவிஞர்களின் கவிதைகள் வாழ்நிலை யாதார்த்தங்களைப்…









